தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ராகு கேது சம்பவம்.. அதிர்ஷ்டத்தில் நுழையும் ராசிகள்.. நட்சத்திர மாற்றத்தில் பணமழை.. யோகம் வந்துவிட்டது

ராகு கேது சம்பவம்.. அதிர்ஷ்டத்தில் நுழையும் ராசிகள்.. நட்சத்திர மாற்றத்தில் பணமழை.. யோகம் வந்துவிட்டது

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 23, 2024 05:56 PM IST

Rahu and Ketu: ராகு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்திலும், கேது பகவான் அஸ்தம் நட்சத்திரத்திலும் பயணம் செய்யப்போகின்றனர். இவர்களின் நட்சத்திர இடமாற்றத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ராகு கேது பெயர்ச்சி
ராகு கேது பெயர்ச்சி

கடந்த அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியிலும் பயணம் செய்ய தொடங்கினர். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்கள். வரும் 2025 ஆம் ஆண்டு தங்களது இடத்தை மாற்றுகிறார்கள். ராகு கேதுவின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகள் நன்மைகளையும், சில ராசிகள் தீமைகளையும் பெறுவார்கள்.

நவகிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ராகு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்திலும், கேது பகவான் அஸ்தம் நட்சத்திரத்திலும் பயணம் செய்யப்போகின்றனர். இவர்களின் நட்சத்திர இடமாற்றத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

துலாம் ராசி

 

ராகு கேது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். இதுவரை உங்களுக்கு சிக்கலாக இருந்த அனைத்து விஷயங்களும் நிவர்த்தி அடையும் எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். கடன் சிக்கல்கள் உங்களை விட்டு விலகும். தீராத நோய் பிரச்சனைகள் உங்களை விட்டு விலகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமண பாக்கியம் உண்டாகும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாள் கடன் சிக்கல்கள் விலகும்.

விருச்சிக ராசி

 

இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. ராகு கேது உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றனர். தேவையற்ற செலவுகள் குறையும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். முன்னோர்கள் சொத்துக்கள் உங்களைத் தேடி வரும். ராகுகால நேரத்தில் விளக்கேற்றி வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.

தனுசு ராசி

 

ராகு பகவானால் உங்களுக்கு நன்மைகள் கிடைத்த போகின்றது. கேது பகவான் உங்களுக்கு யோகத்தை கொடுக்க போகின்றார். தடைபட்டு கடந்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பழைய கடன் சிக்கல்கள் உங்களுக்கு முடிவடையும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. சேமிப்பு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

மகர ராசி

 

ராகு மற்றும் கேது உங்களுக்கு யோகத்தை கொடுக்க போகின்றனர். புதிய நம்பிக்கையோடு உங்களுடைய வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும். செல்வ செழிப்பிற்கு எந்த குறையும் இருக்காது. உங்களுடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெரியவர்களால் உங்களுக்கு பலன்கள் உண்டாகும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel