Lord Rahu: ராகு பெயர்ச்சி.. 3 ராசிகளுக்கு முரட்டு அடி வருகிறது.. ஆபத்துக்களை சந்திக்கப் போகும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Rahu: ராகு பெயர்ச்சி.. 3 ராசிகளுக்கு முரட்டு அடி வருகிறது.. ஆபத்துக்களை சந்திக்கப் போகும் ராசிகள்

Lord Rahu: ராகு பெயர்ச்சி.. 3 ராசிகளுக்கு முரட்டு அடி வருகிறது.. ஆபத்துக்களை சந்திக்கப் போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 12, 2024 03:18 PM IST

ராகு பகவான் கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு வரை நடத்தை மாற்றாமல் பயணம் செய்வார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

ராகு பகவான்
ராகு பகவான்

ராகு பகவான் கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு வரை நடத்தை மாற்றாமல் பயணம் செய்வார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 2025 ஆம் ஆண்டு கும்ப ராசியில் தனது இடத்தை மாற்றுகிறார்.

தற்போது ராகு பகவான் மீன ராசியில் பயணம் செய்கின்ற காரணத்தினால் ஒரு சில ராசிகள் மோசமான பலன்களை பெற வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கன்னி ராசி

 

ராகு பகவானின் தாக்கம் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை கொடுக்கப்படும். உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் அவர் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் உங்களுக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்களால் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சில காரியங்களில் உங்களுக்கு தடைகள் ஏற்படும். மிகவும் கடினமான காலமாக இது அமைந்துள்ளது. காதல் வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். திருமண வாழ்க்கையில் சண்டைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன எனவே எச்சரிக்கையாக இருங்கள்.

தனுசு ராசி

 

உங்கள் ராசியில் ராகு பகவான் நான்காவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தனி கவனம் செலுத்தி உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எந்த சூழ்நிலைகளிலும் அலட்சியமாக இருப்பது நல்லது கிடையாது. நிதி நிலைமையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களை மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பண பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உறவினர்களோடு தகராறுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

கும்ப ராசி

 

உங்கள் ராசிகள் பல்வேறு விதமான சிக்கல்களை ராகு பகவான் ஏற்படுத்துவார். வாழ்க்கையில் செலவுகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். நீங்கள் எளிதாக கையாள முடியாத சூழ்நிலைகள் ஏற்படக்கூடும். பயணங்கள் நல்ல பலன்களை தராது. எந்த வடிவத்திலும் நீங்கள் சிக்கல்களை சந்திக்க நேரிடும். வாழ்க்கையில் பெரிய பண இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

Whats_app_banner