குரு 2025-ல் மிதுனத்தில் நுழைகிறார்.. தலைகீழாக வாழ்க்கை மாறும் 3 ராசிகள்.. பணம் கொட்ட போகுது
Guru Bhagavan: குரு பகவானின் மிதுன ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்க ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் சொர்க்க வாழ்க்கையை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Guru Bhagavan: நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடிய ஒரு சனி பகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக குரு பகவான் விளங்கி வருகின்றார். குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 23, 2025 11:17 AMகுரு குறி வச்சுட்டார்.. அசைக்க முடியாத பண மழை ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க?
Apr 23, 2025 07:30 AMராகு பெயர்ச்சி பலன்கள்: பண காற்று வீசப் போகும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தை கொட்ட வரும் ராகு.. உங்க ராசி இதுல இருக்கா?
Apr 23, 2025 05:00 AM'மகிழ்ச்சியில் மிதக்கும் யோகம் உங்களுக்கா.. யார் கவனமாக இருக்க வேண்டும்'ஏப்.23, 2025 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 22, 2025 04:14 PMகொட்டும் பண மழையில் நனையும் ராசிகள்.. புதன் மீன ராசியில் நேரடி பயணம்.. எது உங்க ராசி?
Apr 22, 2025 03:17 PMகன்னி டூ சிம்மம்.. மே 18 -ல் நடக்க இருக்கும் கேது பெயர்ச்சி.. அதிர்ஷ்டம் பெறப்போகும் 2 ராசிகள் யார் யார்?
Apr 22, 2025 02:04 PMஉருவான சதுர்கிரஹி யோகம்! தொழில் வளர்ச்சி, பணவரவு.. அடுத்த 15 நாள்கள் மகிழ்ச்சியில் இருக்க போகும் ராசிகள்
இந்நிலையில் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். குரு பகவான் இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது வருடத்தை மாற்றுகிறார். அந்த வகையில் குரு பகவான் வரும் 2025 ஆம் ஆண்டு மே மாதம் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார்.
குரு பகவான் மிதுன ராசிக்கு செல்கிறார். இது புதன் பகவானின் சொந்தமான ராசியாகும் குரு பகவானின் மிதுன ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்க ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் சொர்க்க வாழ்க்கையை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
துலாம் ராசி
குருபகவானின் மிதுன ராசி பயணம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். படிப்பிற்காக வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றியாக அமையும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
மேஷ ராசி
குருபகவானின் சஞ்சாரம் உங்களுக்கு சிறப்பாக அமைந்துள்ளது. 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு மிகவும் நல்ல ஆண்டாக அமையும். உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் குருபகவான் பயணம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு உடன் பிறந்தவர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். இந்த காலகட்டம் உங்களுக்கு மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
பண வரவில் எந்த குறைவும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வருமானம் உங்களுக்கு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நீண்ட கால ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
மீன ராசி
குருபகவானின் மிதுன ராசி பயணம் உங்களுக்கு 2025 ஆம் ஆண்டு சிறப்பாக இருக்கப்போகின்றது. மீன ராசியில் நான்காவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப்போகின்றார். பல்வேறு விதமான மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் நல்லபடியாக அமையும் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். சமுதாயத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். மாநிலத்தில் உங்களுக்கு இரட்டிப்பான வளர்ச்சி இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தனிப்பட்ட வாழ்க்கையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
