தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Discuss The General Rules Of Vastu Shastra

Vastu Shastra: ‘வீடு கட்டும் போது கவனிங்க’ வாஸ்து சாஸ்திரத்தின் பொது விதிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 12, 2023 12:35 PM IST

வாஸ்து சாஸ்திரத்தின் பொதுவான விதிகள் குறித்து இங்கே காண்போம்.

வாஸ்து சாஸ்திரம்
வாஸ்து சாஸ்திரம்

குபேர மூலை

தென்மேற்கு பகுதியான குபேர மூலையில் கனமான பொருட்களை வைக்கலாம். அந்த இடம் சாளரம் இல்லாத பகுதியாக இருக்க வேண்டும். வீட்டின் தலைவர் புழக்கம் செய்யும் இடமாக அது இருக்க வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை அங்கு வைத்துக் கொள்ளலாம்.

ஈசான மூலை

வடகிழக்கு பகுதியான ஈசான மூலை சற்று தாழ்வாக இருந்தால் நன்றாக இருக்கும். கனமான பொருட்களை அந்த இடத்தில் வைக்கக் கூடாது. கடவுள் குடிகொள்ளும் இடம் என்பதால் அங்குச் சுத்தமாக இருக்க வேண்டும் நறுமணம் வீச வேண்டும்.

வாசல்

வீட்டின் தலைவாசல் உச்சத்தில் இருந்தால் நல்லது. வடக்கு, கிழ்க்கு பார்த்த வாசல் மிகவும் நலம் தரும். கட்டடத்தின் அமைப்பானது சதுரம் அல்லது செவ்வக வடிவில் இருப்பது சிறப்பாகும்.

அப்படி இல்லையென்றால் வடக்கு அல்லது கிழக்குப் பகுதிகளில் சற்று காலியிடம் விட்டு வீடு கட்டலாம். குழந்தைகள் வயதானவர்கள் நேரம் கழிப்பதற்கு ஏற்றவாறு அங்கே இடமிருந்தால் சிறப்பாகும்.

அக்னி மூலை

அக்னி மூலை குறித்து பெரிதான விளக்கம் தேவையில்லை அனைவரும் அறிந்த ஒன்றாகும். இந்த மூலையில் சமையலறை இருக்க வேண்டும். கிழக்கு பார்த்தவாறு சமையல் செய்யும்படி மேடை அமைத்து இருப்பது சிறப்பாகும்.

வாயு மூலை

இந்த வாயு மூலையில் வடமேற்கு பகுதியாகும். இந்தப் பகுதியில் குளியலறை கழிவறைகள் போன்றவை அமைந்திருக்க வேண்டும்.

WhatsApp channel

டாபிக்ஸ்