Lord Surya: ஒரு வாரத்தில் கஷ்டம்.. சூரியனிடம் சிக்கிய 3 ராசிகள்
Sun transit: சூரிய பகவானால் சங்கடங்களை சந்திக்கப்போகும் ராசிகளையும் இங்கே காண்போம்.
நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விலகி வருகிறார். இவர் மாதத்திற்கு ஒருமுறை இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றத்தின் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. சூரிய பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகிறார். கடந்த ஜனவரி 15ஆம் தேதி அன்று சூரிய பகவான் மகர ராசிக்குள் நுழைந்தார். அன்றைய தினம் பொங்கல் தினமாகவும், மற்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி தினமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
சூரிய பகவான் வரும் பிப்ரவரி 13ஆம் தேதி அன்று சனி பகவான் பயணித்து வரும் அவருடைய சொந்த ராசியான கும்ப ராசியில் நுழைகின்றார். இந்நிலையில் சனி மற்றும் சூரியன் இருவரும் ஒன்று சேர்கின்றனர். இவர்களுடைய சேர்க்கையால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கடக ராசி
சூரிய பகவான் உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் நுழைகின்றார். உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மன அழுத்தம் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகலாம். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் பல்வேறு விதமான தடைகள் வரக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும் எனவே கவனமாக இருப்பது நல்லது.
சிம்ம ராசி
உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்ய உள்ளார். உங்களுடைய அதிபதியாக சூரிய பகவான் திகழ்ந்து வருகின்றார். இவருடைய இடமாற்றம் தற்போது உங்களுக்கு சாதகமாக அமையவில்லை. வியாபாரத்தில் பெரிய அளவில் சொல்லும் அளவிற்கு லாபம் கிடைக்காது. தொழிலில் நம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் திட்டங்களை மாற்ற வேண்டிய சூழ்நிலைகள் உருவாகும். நம்பிக்கையின்மை ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பண பற்றாக்குறை ஏற்படுவதற்கான சூழ்நிலை உண்டாகும்.
விருச்சிக ராசி
உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மற்றவர்கள் உங்களுக்கு சாதகமற்ற செயலில் ஈடுபடுவார்கள். மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பண பரிவர்த்தனைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9