Tamil News  /  Astrology  /  Here We Will Also Find The Rasis From Which Guru Bhagavan Gets Lucky

Guru Peyarchi: குரு பகவானால் உச்சம் செல்ல போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 09, 2024 05:39 PM IST

குரு பகவான் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளையும் இங்கே காண்போம்.

குரு பகவான்
குரு பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

தற்போது குருபகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் குருபகவான். குரு பகவானின் இடமாற்றத்தால் பல்வேறு விதமான சுப பலன்கள் மட்டுமே கிடைக்கும். அவருடைய இடப்பெயர்ச்சி பொறுத்து சுப மற்றும் அசுப பலன்கள் முடிவு செய்யப்படுகின்றன.

குரு பகவான் வரும் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் ராஜ யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

குருபகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் சுப செலவுகள் உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

கடக ராசி

 

உங்களுக்கு மே ஒன்றாம் தேதி முதல் குரு பகவான் சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். அனைத்து விதமான செயல்பாடுகளும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கையில் நிகழக்கூடிய மாற்றங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.

சிம்ம ராசி

 

குருபகவான் உங்களுக்கு மே மாதத்தில் இருந்த பல்வேறு விதமான சுப பலன்களை கொடுக்கப் போகின்றார். அற்புதமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வாழ்க்கை துணையோடு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மகிழ்ச்சி திரும்ப வரும்.

கன்னி ராசி

 

வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையை உண்டாக்கப் போகின்றார். குருபகவான் மூதாதையர் சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வாழ்க்கை துணையுடன் வலுவான உறவு உண்டாகும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். உங்களுடைய ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.