Money Rasis: இயற்கையாகவே பணத்தை சேமிக்கும் திறன் கொண்ட ராசிக்காரர்கள்
பிறப்பிலேயே பணத்தை அதிகமாக்கும் திறன் கொண்ட ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமைவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஒவ்வொரு ராசிகளுக்கும் ஏதோ ஒரு கிரகம் அதிபதியாக இருக்கும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணாதிசயத்தில் இருந்தாலும் எந்த கிரகம் அதிபதியாக இருக்கின்றதோ அதனுடைய அடிப்படை குணாதிசயங்களை அந்தந்த ராசிக்காரர்கள் பெற்றிருப்பார்கள்.
கிரகங்களின் மாற்றம் எப்படி 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ. கிரகங்களின் குணாதிசயங்களை பெற்றிருக்கக் கூடியவர்கள் அந்தந்த குண நலன்களை பெற்றிருப்பார்கள். அந்த வகையில் பணத்தை செலவு செய்யாமல் சிக்கனப்படுத்தும் சில ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
மகர ராசி
கடின உழைப்பால் பணத்தை சேமித்து வைத்துக் கொள்வீர்கள். தேவையில்லாத செலவுகளை தவிர்ப்பீர்கள். கடின உழைப்புக்கு பெயர் போனவர்கள் நீங்கள். பணத்தை சம்பாதிப்பதற்கு எப்போதும் குறிக்கோளாக இருப்பீர்கள். கவனத்தோடு செயல்பட்டு பணத்தை சேமித்து வைத்துக் கொள்வீர்கள்.
விருச்சிக ராசி
வீண் செலவுகளை தவிர்ப்பது உங்கள் குறிக்கோளாகும். கடினமாக உழைத்து பணத்தை சேமித்து வைத்துக் கொள்வீர்கள். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்படுவீர்கள். எதிலும் உணர்ச்சிவசப்படாமல் பணத்தை சேமிப்பதில் குறிக்கோளாக இருப்பீர்கள்.
கன்னி ராசி
பணத்தை சம்பாதிப்பதிலும் மிகவும் கவனமாக இருப்பீர்கள். பணம் எங்கு இருக்கின்றதோ அங்கு சென்று அதனை சரியான முறையில் திட்டம் தீட்டி கடின உழைப்போடு பெறுவீர்கள். புத்திசாலித்தனமான சிந்தனை கொண்டவர்கள் நீங்கள் அதனால் பணத்தை செலவு செய்வதில் மிகவும் கவனமாக இருப்பீர்கள். தேவையில்லாத செலவுகளை குறைத்துக் கொள்வீர்கள்.
பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்