தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  காம உணர்வில் பறக்கும் ராசிகள்.. அந்த விஷயத்தில் இவர்கள் தான் கில்லாடி.. உங்க வாழ்க்கைத் துணை ராசி என்ன?

காம உணர்வில் பறக்கும் ராசிகள்.. அந்த விஷயத்தில் இவர்கள் தான் கில்லாடி.. உங்க வாழ்க்கைத் துணை ராசி என்ன?

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 25, 2024 12:43 PM IST

Lust Rasis: பாலியல் வாழ்க்கையில் சிறப்பாக செயல்படும் சில ராசிகள் குறித்து ஜோதிட சாஸ்திரம் கணித்து வைத்திருக்கிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பாலியல் வாழ்க்கை
பாலியல் வாழ்க்கை

அதேசமயம் ஒருவரின் உடலை வலிமையாக்குவதற்கு பாலியல் வாழ்க்கை மிகப்பெரிய பங்கை வகிக்கின்றது. தம்பதிகள் பாலியல் வாழ்க்கையின் சமமான ஈடுபாட்டோடு இருக்க வேண்டும். ஒருவர் குறைவாக ஒருவர் ஈடுபாட்டோடு இருப்பது தாம்பத்திய வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தும். அதனை விரைவில் நிவர்த்தி செய்தால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

சில தம்பதிக்குள் அடிக்கடி சண்டை வருவதற்கு மிகப்பெரிய காரணம் பாலியல் வாழ்க்கை தான் என கூறப்படுகிறது. அந்த வகையில் பாலியல் வாழ்க்கையில் சிறப்பாக செயல்படும் சில ராசிகள் குறித்து ஜோதிட சாஸ்திரம் கணித்து வைத்திருக்கிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

தாம்பத்திய வாழ்க்கையில் அதிக ஈடுபாட்டோடு இருக்கக்கூடிய ராசிக்காரர்களின் நீங்களும் ஒருவர். செவ்வாய் பகவானால் ஆளப்படும் நீங்கள் பெரும்பாலும் பாலியல் குறித்து அதிகம் சிந்திக்க கூடியவர்களாக திகழ்ந்து வருகின்றீர்கள். மிகவும் உணர்ச்சிபூர்வமான ராசிகளாக நீங்கள் விளங்கி வருகின்றீர்கள். நீங்கள் தினமும் சுவாசிக்கின்ற காற்று போல உடலுறவு கொள்வது அதிகம் ஈடுபாட்டுடன் இருப்பீர்கள். பாலியல் வாழ்க்கையின் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பூர்வமான அனுபவமாக மாற்ற அதிகம் விரும்புவீர்கள்.

ரிஷப ராசி

 

அதிக அன்பு மற்றும் அரவணைப்பை விரும்பக் கூடிய ராசிக்காரர்களாக நீங்கள் விளங்கி வருகின்றீர்கள். காதல் கிரகமாக விளங்கக்கூடிய சுக்கிரன் பகவானால் ஆளப்படும் ராசி நீங்கள். படுக்கை அறையில் எப்போதும் உங்களது துணையின் மனதை கவரக்கூடிய நபராக நீங்கள் எப்போதும் இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையை நீங்கள் எப்போதும் மென்மையாக கையாளுவீர்கள். உடலுறவில் அதிக ஈடுபாடு கொண்ட நீங்கள் மகிழ்ச்சியை எப்போதும் விரும்பக் கூடியவர்கள்.

விருச்சிக ராசி

 

பாலியல் வாழ்க்கையில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் நீங்கள். படுக்கை அறையில் அதிக ஈடுபாட்டோடு செயல்படக் கூடியவர்கள் நீங்கள். நேர்மை தவறி செயல்படுவீர்கள் என்று அர்த்தம் கிடையாது. உங்கள் வாழ்க்கை துணையோடு நீங்கள் அதிக ஈடுபாட்டோடு இருப்பீர்கள். வாழ்க்கை துணையோடு உடலுறவு கொள்வதில் நீங்கள் மிகவும் வல்லவர். உங்களின் வாழ்க்கைத் துணை எப்படி உங்களை ஏற்க நினைக்கிறார்களோ அப்படியே நீங்கள் உறவை மேற்கொள்வீர்கள்.

மீன ராசி

 

இயற்கையிலேயே உடலுறவில் பல்வேறு விதமான தலைகளை கற்று தெரிந்தவர்களாக நீங்கள் விளங்கி வருகின்றீர்கள். உங்களுடைய இன்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். பாலியல் வாழ்க்கையில் நீங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து அதில் மிகப்பெரிய மகிழ்ச்சியை அடைவீர்கள். படுக்கை அறையில் அதிகம் மகிழ்ச்சியை விரும்பக் கூடிய ராசிகளாக நீங்கள் விளங்கி வருகின்றீர்கள். எப்போதும் உச்சகட்டத்தை நோக்கி பயணம் செய்யக்கூடிய ராசிகளில் நீங்களும் ஒருவர்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel

டாபிக்ஸ்