தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Palli Vilum Palan: உடலில் பல்லி விழுந்துவிட்டதா.. எந்த பாகத்தில் விழுந்தது.. இதோ உங்களுக்காக பலன்கள்

Palli Vilum Palan: உடலில் பல்லி விழுந்துவிட்டதா.. எந்த பாகத்தில் விழுந்தது.. இதோ உங்களுக்காக பலன்கள்

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 18, 2024 12:47 PM IST

Palli Vilum Palan: பல்லி அனைவரது வீட்டிலும் இருந்து வருகிறது. அதனுடைய சத்தம் அதனுடைய செயல்பாடுகள் அனைத்தும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பல்லி விழுவதின் பலன்கள் குறித்து விவரமாக இந்த பதிவில் காண்போம்.

பல்லி விழும் பலன்கள்
பல்லி விழும் பலன்கள்

அந்த வகையில் பல்லியின் அனைத்து விதமான செயல்பாடுகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்ந்து வருகின்றது. பல்லி அனைவரது வீட்டிலும் இருந்து வருகிறது. அதனுடைய சத்தம் அதனுடைய செயல்பாடுகள் அனைத்தும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பல்லி விழுவதின் பலன்கள் குறித்து விவரமாக இந்த பதிவில் காண்போம்.

நெற்றி 

 

நெற்றி மீது பல்லி விழுந்தால் நல்ல சகுனமாக கருதப்படுகிறது இடது பகுதியில் விழுந்தால் கீர்த்தி கிடைக்கும் வலது நெற்றி பக்கத்தில் விழுந்தால் லட்சுமி கடாக்ஷம் உண்டாகும் என கூறப்படுகிறது.

தலை 

 

தலையின் மீது பல்லி விழுந்தால் அசுப பலன்களாக கூறப்படுகிறது மன நிம்மதி கெட்டுப் போகும் சூழ்நிலை உருவாகும் குறிப்பாக உறவினர்கள் பகுதியில் அசுப காரியங்கள் நடப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது

முகம் 

 

முகத்தில் பல்லி விழுந்தால் வீட்டிற்கு உறவினர்கள் வருவார்கள் என கருதப்படுகிறது. இல்லை என்றால் நல்ல காரியம் உங்களைத் தேடி வரும் என கூறப்படுகிறது.

புருவம்

 

புருவப் பகுதியில் பல்லி விழுந்தால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. ராஜா அறிவணையில் அமரக்கூடிய சூழ்நிலை உண்டாகும் என கூறப்படுகிறது. கண் மற்றும் கண்ணப்பகுதிகளில் பல்லி விழுந்தால் உங்களுக்கு தவறுகளுக்கு ஏற்ற தண்டனை கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

இடது கை மற்றும் கால்

 

உடம்பு பகுதியில் இருக்கக்கூடிய இடது கை மற்றும் கால் பகுதிகளில் பல்லி விழுந்தால் அன்றைய தினம் உங்களுக்கு உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

வலது கை மற்றும் கால்

 

உங்கள் உடம்பில் வலது கால் மற்றும் கைப்பகுதிகளில் பல்லி விழுந்தால் உடல் ஆரோக்கியத்தில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தொப்புள்

 

தொப்புள் பகுதியில் பல்லி விழுந்தால் விலை உயர்ந்த பொருட்கள் உங்களைத் தேடி வரும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக நகைகள் வாங்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

கழுத்து

 

உங்களது கழுத்தின் இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. வலது பக்க கழுத்தில் பல்லி விழுந்தால் சுற்றி இருப்பவர்களோடு பகைமை உண்டாகும் என கூறப்படுகிறது.

பாதம்

 

பாத பகுதியில் பல்லி விழுந்தால் நீங்கள் வெளியே பயணம் செல்லக்கூடிய சூழ்நிலை உண்டாகும் என கூறப்படுகிறது குறிப்பாக வெளிநாடு அல்லது வேலை தேடி வெளிப்பகுதிகளுக்கு சென்று முன்னேற்றம் அடையக்கூடிய சூழ்நிலை உண்டாகும் என கூறப்படுகிறது.

மார்பு

 

உங்களுடைய வலது மார்பில் பல்லி விழுந்தால் வாழ்க்கையில் எதிர்பாராத லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. அதேசமயம் இடது மார்பில் பல்லி விழுந்தால் உங்களுக்கு சுகம் கிட்டும் எனக் கூறப்படுகிறது.

தொடை

 

தொடை பகுதியில் பல்லி விழுந்தால் உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலை அமையும் என கூறப்படுகிறது. குறிப்பாக பெற்றோர்களுக்கு வருத்தம் ஏற்படக்கூடிய தருணங்கள் அமையும் என கூறப்படுகிறது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel