Guru: ரிஷபத்தில் வக்ரமாகப் பெயரும் குரு பகவான்.. டைவர்ஸ் வரை சென்று சேரப்போகும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru: ரிஷபத்தில் வக்ரமாகப் பெயரும் குரு பகவான்.. டைவர்ஸ் வரை சென்று சேரப்போகும் ராசிகள்

Guru: ரிஷபத்தில் வக்ரமாகப் பெயரும் குரு பகவான்.. டைவர்ஸ் வரை சென்று சேரப்போகும் ராசிகள்

Marimuthu M HT Tamil Published Oct 04, 2024 04:53 PM IST
Marimuthu M HT Tamil
Published Oct 04, 2024 04:53 PM IST

Guru: ரிஷபத்தில் வக்ரமாகப் பெயரும் குரு பகவான்.. டைவர்ஸ் வரை சென்று சேரப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.

Guru: ரிஷபத்தில் வக்ரமாகப் பெயரும் குரு பகவான்.. அதிர்ஷ்டத்தைப் பெறப்போகும் ராசிகள்
Guru: ரிஷபத்தில் வக்ரமாகப் பெயரும் குரு பகவான்.. அதிர்ஷ்டத்தைப் பெறப்போகும் ராசிகள்

இது போன்ற போட்டோக்கள்

ரிஷப ராசியில் குருவின் பிற்போக்கு பெயர்ச்சி அடுத்த 4 மாதங்களுக்கு, அப்படியே படிப்படியாக இருக்கும். வரும் பிப்ரவரி 4ஆம் தேதி, 2025அன்று, குரு பகவான் மீண்டும் நேராக வக்ர நிலையில் ராசிகளில் சஞ்சரிப்பார்.

ஒன்பது கிரகங்களில் குருவின் பிற்போக்கு பெயர்ச்சி வேத ஜோதிடத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், வரும் அக்டோபர் 9ஆம் தேதியன்று, குரு பகவான் பிற்போக்கு நிலையில் பயணிக்க உள்ளார்.

குரு அல்லது வியாழன் பகவானின் பிற்போக்கு பெயர்ச்சி பல ராசிகளில் நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். இருப்பினும், மூன்று ராசிகளின் வாழ்க்கையில் மிகவும் சாதகமான தாக்கம் நிலவுகிறது.

குரு பகவானின் பிற்போக்கு பெயர்ச்சியினால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள்:

கடகம்:

கடக ராசிக்காரர்கள் இந்த முறை மிகவும் ஆக்கப்பூர்வமாக இருப்பார்கள். மாணவர்கள் தங்கள் கலைத் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் பணிபுரிபவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டமும் ஆதரவும் கிடைக்கும். பொருட்களை விற்பவர்கள் பெரும் வெற்றி பெறுவீர்கள். சமூக சேவையில் தீவிரமாக ஈடுபடுவீர்கள். மதம் மற்றும் ஆன்மிகப் பணிகளை செய்வீர்கள். சமூகத்தில் உங்கள் கவுரவம் உயரும். கணவன் - மனைவி இடையே இருந்த பிணக்குகள் மாறி, காதல் உறவு பலப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மன அமைதி அதிகரிக்கும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு, வியாழனின் பிற்போக்கு பெயர்ச்சி சாதகமாக இருக்கும். மனதளவில் விருச்சிக ராசியினர் வலிமையுடன் இருப்பர். உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்க வாய்ப்புள்ளது. நீங்கள் சொந்தமாக ஒரு தொழில் அல்லது வியாபாரத்தைத் தொடங்கலாம். உத்தியோகஸ்தர்கள் வியாபாரத்தில் நிதி ஆதாயங்களைப் பெற வாய்ப்புள்ளது. நீங்கள் விரும்பிய பணிகளை முடிக்க முயற்சி செய்யலாம். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பணம் வரும். ஆசைகள் நிறைவேறும். ஆரோக்கியப் பிரச்னைகள் நீங்கி மனம் மகிழ்ச்சியாக இருக்கும். கணவன் - மனைவி இடையே இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கி நல்ல ஒரு பாண்டிங் கிடைக்கும்.

மீனம்:

மீன ராசி, குரு பகவானின் சொந்த ராசி ஆகும். எனவே, இந்த ராசியில் குரு பகவானின் பிற்போக்கு நிலை சாதகமான தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. உங்கள் சரியான முயற்சிகள் பணத்திற்கு வழிவகுக்கும். வருமானத்தை அதிகரிப்பதால் வாழ்க்கைத் தரம் உயரும். மாணவர்கள் தங்கள் தொழிலில் பெரிய உயரங்களை அடைவார்கள். புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். அவருக்கு கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். வியாபாரம் விரிவடைய வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும்.

பொறுப்பு துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.