Janmashtami Special 2024: நாளை கோகுலாஷ்டமி! பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு பிடித்த 4 ராசிகள் இதுதான்!
Lord Krishna favourite zodiac sign: ஜோதிடத்தில் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியையும் ஏதாவது ஒரு தெய்வம் விசேஷமாக ஆசீர்வதிக்கும். ஜென்மாஷ்டமி பண்டிகையில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரினில் அருளுக்கு பாத்திரமான ராசிகளை பற்றி நாம் தெரிந்து கொள்வோம்.
Janmashtami Special 2024: கிருஷ்ண பரமாத்மா பிறந்த நாள் ஆனது கோகுலாஷ்டமி அல்லது ஜென்மாஷ்டமி என்ற பெயரில் நாளையும், நாளை மறுநாளும் நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்றது.
கிருஷ்ணர் தன் வாழ்நாளில் பல தீய சக்திகளை வென்று, நன்மையை நிலைநிறுத்தியவர். இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையிலும், நன்மையின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையிலும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் வீடுகள் மற்றும் கோயில்களில் கிருஷ்ணனின் பிறப்பிடமான கோகுலத்தைப் போன்று அழகாக அலங்கரிக்கப்பட்டு உறி அடிப்பது உள்ளிட்ட விழாக்கள் நடைபெறும்.
முதல் நாள் கொண்டாட்டத்தில் இல்லறத்தாரும், இரண்டாம் நாள் வைணவ பிரிவினரும் ஜென்மாஷ்டமி பண்டிகையை பக்தி உடன் கொண்டாடுகின்றனர். பகவான் கிருஷ்ணர் அஷ்டமி திதியில் பிறந்தார் என்பது ஐதீகம். இம்முறை கிருஷ்ணர் பிறந்த காலத்தில் இருந்த ஜென்மாஷ்டமி அன்று இது போன்ற பல யோகங்கள் உருவாகின்றன. அதில் ரோகிணி நட்சத்திரம் முதலிடம் பெறுகின்றது.
ஜோதிடத்தில் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியையும் ஏதாவது ஒரு தெய்வம் விசேஷமாக ஆசீர்வதிக்கும். ஜென்மாஷ்டமி பண்டிகையில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரினில் அருளுக்கு பாத்திரமான ராசிகளை பற்றி நாம் தெரிந்து கொள்வோம்.
1. ரிஷபம் ராசி
ஜோதிடத்தின் படி, ரிஷபம் கிருஷ்ணரின் விருப்பமான ராசிகளில் ஒன்றாகும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அருளால், இந்த ராசிக்காரர்கள் முன்னேற்றத்தையும் வெற்றியையும் பெறுகிறார்கள் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். இந்த ராசிக்காரர்கள் கடினமான சூழ்நிலைகளையும் கிருஷ்ணனரில் அருளால் சிறப்பாக கையாள்கிறார்கள். ஜென்மாஷ்டமி அன்று பால கோபாலனை வழிபட வெற்றிகள் குவியும்.
2. கடகம்
கடக ராசிக்காரர்கள் கிருஷ்ணரின் ஆசீர்வாதம் பெற்றவர்கள். ஜோதிடத்தின் படி, ஸ்ரீ கிருஷ்ணரை தவறாமல் வழிபடும் இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் எந்த குறையும் இருக்காது.
சிம்மம்
சிம்மம் ராசியானது கிருஷ்ணரால் ஆசிர்வதிக்கப்பட்ட ராசிகளில் ஒன்றாகும். இந்த ராசியில் பிறந்தவர்கள் தைரியமும், வலிமையும் ஒருங்கே பெற்றவர்கள் ஆவார். கிருஷ்ணரை தவறாமல் வழிபடுவதன் மூலம், இந்த ராசிக்காரர்கள் செய்யும் செயல்களில் வெற்றிகளை குவிப்பார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் கிருஷ்ணரின் ஆசீர்வாதம் பெற்றவர்கள். ஸ்ரீ கிருஷ்ணருக்கு பிடித்த ராசிகளில் இதுவும் ஒன்று. இந்த ராசிக்காரர்கள் கிருஷ்ணரை வழிபடுவதன் மூல, சுப பலன்களைப் பெறுவார்கள்.
கிருஷ்ணர் விஷ்ணுவின் எட்டாவது அவதாரம்: இந்து மத நூல்களின்படி, கிருஷ்ணர் ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ண அஷ்டமி நாளில் நள்ளிரவில் பிறந்தார். இந்து வேதங்களின்படி, கிருஷ்ணர் விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாக கருதப்படுகிறார். கம்சனின் கொடுமைகளில் இருந்து மக்களை விடுவிக்க ஜென்மாஷ்டமி நாளில் விஷ்ணு பகவான் கிருஷ்ண வடிவில் பிறந்தார்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.