Chandra Transit: சந்திரனின் பெயர்ச்சியால் பணமழை பெறும் ராசிகள்
சந்திர பகவானால் பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமைவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. கிரகங்களின் ஒவ்வொரு செயல்பாடும் 12 ராசிகளின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். 12 ராசிகளும் ஏதோ ஒரு கிரகத்தை அதிபதியாக கொண்டிருக்கும்.
ஒரு சில கிரகத்தின் இடமாற்றமானது மிகவும் பெரிதாக பார்க்கப்படுகிறது. இடமாற்றத்தின் போது சில ராசிகளுக்கு, அசுப பலன்களும் சில ராசிகளுக்கு சுப பலன்களும் கிடைக்கும். ராகு கேது, சனி, சூரியன், சுக்கிரன், குருபகவான் செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களின் இடப்பெயர்ச்சியானது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
சந்திர பகவான் செப்டம்பர் 5ஆம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் ராஜயோகத்தை பெறப்போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.
ரிஷப ராசி
வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். உடன் பிறந்தவர்களால் உதவி கிடைக்கும். சந்திர பகவான் அதிர்ஷ்டமான சூழ்நிலையை உருவாக்கி தரப் போகின்றார். நண்பர்களால் உதவி கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உருவாகும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.
தனுசு ராசி
வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும். விலகும் எதிர்பாராத நேரத்தில் பணவரவு உண்டாகும். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும்.
கடக ராசி
சந்திர பகவானின் பெயர்ச்சியானது உங்களுக்கு மிகப்பெரிய சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. பண வரவில்லை இந்த குறையும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.
கன்னி ராசி
புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். நிதி நிலைமைகளில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். திட்டமிட்டபடி செயல்பட்டால் பல்வேறு விதமான லாபங்களை நீங்கள் பெறலாம்.
பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்