நாளை முதல் கையில் சிக்காத ராசிகள்.. புதன் பண மூட்டையை தூக்கி வீசும் நேரம் வந்துவிட்டது.. வாரிக் கொள்வது யார்?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  நாளை முதல் கையில் சிக்காத ராசிகள்.. புதன் பண மூட்டையை தூக்கி வீசும் நேரம் வந்துவிட்டது.. வாரிக் கொள்வது யார்?

நாளை முதல் கையில் சிக்காத ராசிகள்.. புதன் பண மூட்டையை தூக்கி வீசும் நேரம் வந்துவிட்டது.. வாரிக் கொள்வது யார்?

Suriyakumar Jayabalan HT Tamil
Nov 30, 2024 05:51 PM IST

Lord Mercury: புதன் பகவான் நவம்பர் 30ம் தேதி அன்று விருச்சிக ராசியில் அஸ்தமனம் ஆகின்றார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் யோகத்தை பெறப்போகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நாளை முதல் கையில் சிக்காத ராசிகள்.. புதன் பண மூட்டையை தூக்கி வீசும் நேரம் வந்துவிட்டது.. வாரிக் கொள்வது யார்?
நாளை முதல் கையில் சிக்காத ராசிகள்.. புதன் பண மூட்டையை தூக்கி வீசும் நேரம் வந்துவிட்டது.. வாரிக் கொள்வது யார்?

புதன் பகவான் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் புதன் பகவான் நவம்பர் 30ம் தேதி அன்று விருச்சிக ராசியில் அஸ்தமனம் ஆகின்றார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் யோகத்தை பெறப்போகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

துலாம் ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் புதன் பகவான் அஸ்தமனமாக உள்ளார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் இருக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். பணவரவில் இருந்த குறையும் இருக்காது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். 

நிதி நிலைமையும் உங்களுக்கு சிறப்பாக இருக்கும் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதல் வாழ்க்கையில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும்.

மகர ராசி

உங்கள் ராசியில் 11 வது வீட்டில் புதன் பகவான் அஸ்தமனமாக உள்ளார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் மிகப்பெரிய உயர்வு இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். தலைமை பண்புகள் உங்களைத் தேடி வரும். சரியான நேரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கக்கூடும். புதிய முதலீடுகள் நிறைய லாபத்தை பெற்று தரும் கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். 

பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு சிறப்பான லாபத்தை பெற்று தரும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு யோகம் கிடைக்கும். வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கும்ப ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் புதன் பகவான் அஸ்தமனமாக உள்ளார். அதனால் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த நஷ்டங்கள் அனைத்தும் தற்போது நிவர்த்தி அடையும். 

தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பெற்றோர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தேர்வுகளில் வெற்றி பெற்று வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner