தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  இந்த பொருள்களை மட்டும் கைத்தவறி கூட கீழே போடாதீங்க..

இந்த பொருள்களை மட்டும் கைத்தவறி கூட கீழே போடாதீங்க..

Aarthi V HT Tamil
Jul 24, 2023 11:16 AM IST

நம் கைதவறி கூட கீழே தவற விட கூடாத பொருட்கள் பற்றி பார்க்கலாம்.

லட்சுமி
லட்சுமி

பூஜை தட்டு

பூஜை செய்யும் போது ஆரத்தி தட்டு நம் கையில் இருந்து கீழே விழுந்தால் அது அபுசு குணமாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கனவில் உங்களின் வழிபாட்டை ஏற்க வில்லை என்று அர்த்தம். வரவிருக்கும் ஆபத்தை முன்கூட்டியே கடவுள் நமக்கு காட்டுவதற்கான ஒரு அறிகுறியானது இது.

விளக்கு 

பூஜை செய்து கொண்டு இருக்கும்போது விளக்கு அணைந்தால், நம் பூஜையை முதலில் இருந்து தொடங்க வேண்டும். இப்படி செய்தால் நம் குடும்பத்தில் இருக்கும் தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.

கடுகு எண்ணெய்

சனிக்கடவனுடன் தொடர்புடையது கடுகு எண்ணெய். அதனால் கடுகு எண்ணெய் கீழே ஊற்றினால் சனிபகவானை வறுத்தமடைய செய்யும். இதனால் கையில் என்னை பாட்டில் எடுத்து சொல்லும் போது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

தானியங்கள்

லட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்தமான ஒன்று தானியங்கள். தானியங்கள் கீழே விழுந்தாலோ அல்லது நம் கால்களில் சிக்கினாலோ உடனே நெற்றியில் தொட்டு கும்பிட வேண்டும். இப்படி செய்யாவிட்டால் லட்சுமி தேவியின் கோபத்திற்கு நாம் ஆளாகி விடுவோம்.

பால்

அன்றாடம் வீடுகளில் தினமும் பயன்படுத்தும் பொருள் பால். பால் காய்ச்சும் போது நம் கவனக்குறைவால் அது வழிவது இயல்பான ஒன்றுதான். ஆனால் சாஸ்திரங்கள் படி வீட்டில் பால் கசிவது அபசகுனமான ஒன்று. இது தவிர புது வீட்டிற்கு செல்லும்போது பால் கசிந்தால் அது நல்ல சகுனமாக பார்க்கப்படும்.

உணவு

தினமும் சாப்பிடும் போது கவன குறைவாக கூட உணவை தரையில் கொட்டி விடக்கூடாது. இது நாம் லட்சுமி தேவிக்கு அவமானம் செய்வதாக பார்க்கப்படுகிறது. இப்படி செய்தால் நமக்கு நிதி பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.

உப்பு

வீட்டில் தினமும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பொருள்களில் மிக முக்கியமான ஒன்று உப்பு. கவன குறைவு காரணமாக உப்பு தலையில் சிந்தினால், வாழ்க்கையில் அடுத்தடுத்து புதிய சிக்கல்கள் வரப்போகிறது என்பதை குறைக்கும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்