Head Shaving:மொட்டை அடித்தால் கஷ்டங்கள் நீங்குமா? 12 லக்னகாரர்கள் எப்போது மொட்டை அடிக்கலாம்?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Head Shaving:மொட்டை அடித்தால் கஷ்டங்கள் நீங்குமா? 12 லக்னகாரர்கள் எப்போது மொட்டை அடிக்கலாம்?

Head Shaving:மொட்டை அடித்தால் கஷ்டங்கள் நீங்குமா? 12 லக்னகாரர்கள் எப்போது மொட்டை அடிக்கலாம்?

Marimuthu M HT Tamil
Sep 03, 2023 07:16 AM IST

12 லக்னகாரர்கள் எப்போது மொட்டை அடித்தால் யோகத்தைப்பெறலாம்.

மொட்டை அடித்தல்
மொட்டை அடித்தல்

மொட்டை அடிப்பது எப்போது:

மேஷ லக்னம் மற்றும் விருச்சிக லக்னகாரர்கள்: உங்கள் லக்னாபதியான செவ்வாய் கடகராசியில் நீசத்தைச் சந்திக்கும்போது மொட்டை எடுத்துக்கொள்ளலாம். அப்படி செய்யும்போது எங்கு அடிக்கலாம்: ஆற்றங்கரையோர தலங்களில், நீர் நிலை சார்ந்த இடங்களில் மொட்டை அடித்துக்கொண்டால், செயல்கள் ஜெயம் பெறும். 

ரிஷப லக்னம் மற்றும் துலா லக்னம்: ரிஷப லக்னம் மற்றும் துலா லக்னத்தின் லக்கினாதிபதியாக சுக்கிரன் இருக்கிறார். கன்னி ராசியில் சுக்கிரன் பிரவேசிக்கும் காலத்தில், குறிப்பாக கோச்சாரத்தில், மொட்டை அடித்துக்கொண்டால் உங்கள் செயலில் இருக்கும் வீக்கம் குறையும்.

மிதுனம் மற்றும் கன்னி லக்கினகாரர்கள்: மிதுன லக்னம் மற்றும் கன்னி லக்னத்தின், லக்கினாபதியாக புதன் பகவான் இருக்கிறார். புதன் பகவான் மீன ராசியில் நீசம் அடையும்போது, அதாவது வருடத்திற்கு ஒருமுறை மீனராசியில் புதன் பகவான் சஞ்சாரம் செய்வார். அங்கே சஞ்சாரத்துக்குண்டான காலத்தில் மொட்டை அடித்துக்கொண்டால், உங்கள் செயல்களில் உள்ள தடை நீங்கும். 

கடக லக்னம்: மாதம் ஒரு முறை சந்திரன் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார். கோச்சாரத்தில் சந்திரபகவான் விருச்சிக ராசிக்கு சஞ்சரிந்து நீச்சம் அடையும்போது, மொட்டை அடிக்கலாம்.

சிம்ம லக்னம்: சூரிய பகவான் நீசம் அடையும் துலாம் ராசியில்,ஐப்பசி மாத காலத்தில் மொட்டை அடித்துக்கொண்டால், அவர்களது செயல்களில் இருக்கும் பிரச்னை குறையும். 

தனுசு லக்னம் மற்றும் மீன லக்னம்: இந்த இரு லக்னத்திற்கு,லக்கினாதிபதியாக குரு பகவான் இருக்கிறார். குருபகவான் 12 வருடத்திற்கு ஒருமுறை நீசம் அடைகிறார். அப்போதுதான் மொட்டை அடிக்கவேண்டும். அப்படி அடித்தால், பலன்கள் நன்றாக இருக்கும்.

மகர லக்னம் மற்றும் கும்ப லக்னம்: இந்த இரு லக்னகாரர்களுக்கும் லக்கினாதிபதியாக சனிபகவான் இருக்கிறார். மேஷத்தில் சனிபகவான் நீசம் அடையும்போது, மொட்டை அடிக்கலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்