Vinayagar Chaturthi 2024: வீட்டில் எங்கு விநாயகர் சிலையை வைத்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Vinayagar Chaturthi 2024: வீட்டில் எங்கு விநாயகர் சிலையை வைத்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் தெரியுமா?

Vinayagar Chaturthi 2024: வீட்டில் எங்கு விநாயகர் சிலையை வைத்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் தெரியுமா?

Karthikeyan S HT Tamil
Aug 28, 2024 01:47 PM IST

Vinayagar Chaturthi 2024: விநாயகர் சிலையை வாஸ்து படி சரியான திசையில், சரியான இடத்தில் வைப்பதால் அதன் பலன் பல மடங்காக அதிகரிக்கும். இந்த பதிவில் உங்கள் வீட்டில் எந்த இடத்தில் விநாயகப் பெருமானை வைத்து வழிபடலாம் என்பதை வாஸ்து குறிப்புகளின் அடிப்படையில் தெரிந்து கொள்வோம்.

Vinayagar Chaturthi 2024: வீட்டில் எங்கு விநாயகர் சிலையை வைத்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் தெரியுமா?
Vinayagar Chaturthi 2024: வீட்டில் எங்கு விநாயகர் சிலையை வைத்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் தெரியுமா?

நாம் செய்யும் எந்த செயலிலும் தடை ஏற்படாமல் இருக்க விநாயகரை மனம்முருகி வேண்டுகிறோம். விநாயகப் பெருமானை சரியான இடத்தில் வைத்து வழிபடுவது உங்கள் வாழ்வில் அமைதியையும் செழிப்பையும் தரும். இந்தாண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த பதிவில் உங்கள் வீட்டில் எந்த இடத்தில் விநாயகப் பெருமானை வைத்து வழிபடலாம் என்பதை வாஸ்து குறிப்புகளின் அடிப்படையில் தெரிந்து கொள்வோம்.

வாஸ்து குறிப்புகள் சொல்வது என்ன?

  • விநாயகர் சிலையை வாஸ்து படி சரியான திசையில், சரியான இடத்தில் வைப்பதால் அதன் பலன் பல மடங்காக அதிகரிக்கும். விநாயகர் சிலையை வீட்டின் கிழக்கு அல்லது மேற்கு திசையில் எளிதில் கண்ணில் படும்படியான இடத்தில் வைக்க வேண்டும். இவ்வாறு வைப்பதன் மூலம் உங்கள் வீட்டில் ஐஸ்வர்யம் உண்டாகும்.
  • வீட்டின் தெற்கு திசையில் விநாயகர் சிலையை வைக்கக்கூடாது. அதேபோல், கழிப்பறைக்கு அருகில் அல்லது குளியலறையுடன் இணைக்கப்பட்ட சுவருக்கு அருகிலும் விநாயகர் சிலையை வைக்கக்கூடாது. இப்படி வைத்தால் எதிர்மறை ஆற்றல்கள் வெளிப்படும்.
  • உட்கார்ந்த நிலையில் இருக்கும் விநாயகர் சிலையை வீட்டில் வைப்பது நன்மை தரும். இது அதிர்ஷ்டத்தையும் வெற்றியையும் தரும்.  விநாயகர் சிலையை ஒருபோதும் வீட்டின் படிக்கட்டுகளுக்கு அடியில் வைக்கக்கூடாது. ஏனென்றால் நாம் படிக்கட்டுகளில் ஏறிச் செல்கிறோம். இதனால் கடவுளை மிதிப்பது போன்ற எண்ணம் உருவாகும்.
  • விநாயகரின் படமோ சிலையோ எதுவாக இருந்தாலும் துதிக்கை வலது பக்கம் இருப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஏனேன்றால் அவ்வாறு உள்ளது போன்ற சிலைகளை வைத்து வழிபட்டால் வீட்டில் பிரச்னைகள் வரும்.
  • விநாயகரின் துதிக்கை அவரின் இடது கை பக்கம் நோக்கி வைத்திருப்பது போன்ற சிலையை மட்டுமே வீட்டில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
  • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விநாயகர் சிலைகளை வீட்டில் வைக்கக்கூடாது. பூஜை அறையாக இருந்தால் ஒரே ஒரு விநாயகர் சிலையை மட்டும் வைக்கவேண்டும் என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.
  • வெள்ளி போன்ற உலோகத்தால் செய்த விநாயகர் சிலையை வீட்டில் வைத்து வழிபடுவதாக இருந்தால் அதை வடகிழக்கு அல்லது தென் மேற்கு திசையில் மட்டுமே வைக்க வேண்டும்.
  • விநாயகர் சிலையை சிறிய மரப்பலகை அல்லது மற்றவற்றை விட சற்று உயரமான மேடையாக அமைத்து வைக்க வேண்டும். விநாயகர் சிலையின் பாதத்திற்கு அருகே சிறிய கிண்ணத்தில் அரிசி வைத்து வழிபாடு செய்தால் செல்வ வளமும், அதிர்ஷ்டமும் பெருகும் என்பது நம்பிக்கை.
  • மா, சந்தனம் மற்றும் வேப்ப மரத்தால் செய்யப்பட்ட விநாயகர் சிலை மங்களகரமானதாக கருதப்படுகிறது. எனவே அவற்றை வீட்டின் வாசலில் வைப்பது நேர்மறை ஆற்றலையும் அதிர்ஷ்டத்தையும் தரும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்