TODAY POOJA TIME : ஆக.24 சனிக்கிழமை.. இன்று பூஜைக்கான நேரம்.. வழிபாடு குறித்த முக்கிய தகவல்கள் இதோ!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Pooja Time : ஆக.24 சனிக்கிழமை.. இன்று பூஜைக்கான நேரம்.. வழிபாடு குறித்த முக்கிய தகவல்கள் இதோ!

TODAY POOJA TIME : ஆக.24 சனிக்கிழமை.. இன்று பூஜைக்கான நேரம்.. வழிபாடு குறித்த முக்கிய தகவல்கள் இதோ!

Pandeeswari Gurusamy HT Tamil
Published Aug 24, 2024 06:00 AM IST

TODAY POOJA TIME : சனிக்கிழமையில் சனிபகவான், பெருமாள், ஆஞ்சநேயர் போன்ற கடவுள்களுக்கு மிகவும் விஷேசமான நாள். இந்த நாளில் இந்த தெய்வங்களை வழிபடுவது வாழ்வில் அனைத்து நன்மைகளையும் கொண்டு வரும் என்பது மக்களின் நம்பிக்கை.

TODAY POOJA TIME : ஆக.24 சனிக்கிழமை.. இன்று பூஜைக்கான நேரம்.. வழிபாடு குறித்த முக்கிய தகவல்கள் இதோ!
TODAY POOJA TIME : ஆக.24 சனிக்கிழமை.. இன்று பூஜைக்கான நேரம்.. வழிபாடு குறித்த முக்கிய தகவல்கள் இதோ!

இது போன்ற போட்டோக்கள்

இன்றைய பஞ்சாங்கம்

தமிழ் ஆண்டு : குரோதி வருடம்

மாதம் : ஆவணி மாத

தேதி: 8

கிழமை : சனிக்கிழமை

திதி : பஞ்சமி

நேரம் : பிற்பகல் 1 மணி 25 நிமிடம் வரை

பின்பு : சஷ்டி

நாள் : சம நோக்கு நாள்

பிறை : தேய்பிறை

நட்சத்திரம் : இன்று அசுபதி ஆகஸ்ட். 25ம் தேதி அதி காலை 3 நிமிடம் வரை பின்பு பரணி

சூரிய உதயம்

காலை : 6 மணி 04 நிமிடம்

நல்ல நேரம்

காலை : 7 மணி 45 நிமிடம் முதல் 8 மணி 45 நிமிடம் வரை

மாலை : 4 மணி 45 நிமிடம் முதல் 5 மணி 45 நிமிடம் வரை

நல்ல காரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டிய நேரம்

ராகுகாலம் : காலை 9 மணி முதல் காலை 10 மணி 30 நிமிடம்

எமகண்டம் : பிற்பகல் 1 மணி 30 நிமிடம் முதல் முதல் 3 மணி வரை

குளிகை : காலை 6 மணி முதல் 7 மணி 30 நிமிடம் வரை

சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்

கரணம் :12 முதல் 1.30

சனிக்கிழமை வழிபாடு

இன்று சனிக்கிழமை. சனிக்கிழமையில் பொதுவாக சனிபகவான், பெருமாள், ஆஞ்சநேயர் போன்ற கடவுள்களுக்கு மிகவும் விஷேசமான நாள். இந்த நாளில் இந்த தெய்வங்களை வழிபடுவது வாழ்வில் அனைத்து நன்மைகளையும் கொண்டு வரும் என்பது மக்களின் நம்பிக்கை.

பொதுவாக சனி கிழமையில் சனி பகவானின் அருளை பெற வீட்டில் சமைக்கும சாதத்தில் தயிர் கலந்து அதில் கருப்பு எள்ளை சேர்க்க வேண்டும். இந்த உருண்டைகளை காக்கைக்கு வைக்க வேண்டும். இதனால் சனி தோஷத்தை நீக்கி வாழ்வில் அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஆஞ்சநேயருக்கு உகந்த நாள்

சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கும் மிகவும் உகந்த நாள் ஆகும். இந்த நாளில் வெண்ணெய் சாற்தி ஆஞ்சநேயரை மனதார வழிபடுவது உங்கள் கஷ்டங்களை நீக்கும்.சனிக்கிழமையில் அனுமன் சாலிசாவை படிப்பது மிகவும் விஷேசம்.

பெருமாள் வழிபாடு

சனிக்கிழமையில் பெருமாளை வழிபாடு செய்வதால் நம் பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கை. பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வழிபடுபதால் வாழ்வில் பிரச்சனைகள் தீரும். துளசியில் மகாலட்சுமி தேவி வாசம் செய்கிறார் என்பது நம்பிக்கை.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்ந்து ஜோதிடம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்

Whats_app_banner

டாபிக்ஸ்