கற்றாழையை எந்த திசையில் நட்டால், லட்சுமி தேவி அருள் கிடைக்கும் தெரியுமா.. எந்த திசை பகுதியில் வைக்க கூடாது பாருங்க!
கற்றாழை ஆரோக்கிய நன்மைகளுக்காக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் வாஸ்து சாஸ்திரத்தில் இது ஒரு நன்மை பயக்கும் தாவரமாக அறியப்படுகிறது. அதனால்தான் இது அதிர்ஷ்ட தாவரம் என்று அழைக்கப்படுகிறது.

கற்றாழை அழகு மற்றும் ஆரோக்கியத்தை அளிப்பதில் முதன்மையானது. சோற்றுக்கற்றாழையின் பெயரைக் கேட்டாலே அதன் ஆரோக்கிய நன்மைகள்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் படியும் கற்றாழை மிகவும் விரும்பப்படுகிறது. கற்றாழை வைப்பதால் வீட்டில் செல்வச் செழிப்புக்கு பஞ்சமில்லை என்பது ஐதீகம். பலர் தங்கள் வீடுகளில் கற்றாழை வளர்க்கிறார்கள். ஆனால் வாஸ்து படி மணி பிளாண்ட், ஜேட் செடி போல் இதுவும் ஒரு அதிர்ஷ்ட செடி. கற்றாழை பல மருத்துவ குணங்கள் கொண்ட செடியாகும். அதனால் தான் இந்த செடியை வீட்டில் வைத்திருந்தால் பல நன்மைகள் கிடைக்கும்.
இது போன்ற போட்டோக்கள்
Jul 12, 2025 11:30 AMசுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?
Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!
Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!
Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
Jun 30, 2025 09:29 AMஇந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும் - வீடு வாங்குவீங்க, தொழிலில் வெற்றி பெறுவீங்க!
Jun 27, 2025 10:06 AMநாளை முதல் இந்த மூன்று ராசிகளும் சக்கரத்தை சுழற்றும்.. மாறப்போகும் அதிர்ஷ்டம்.. நவ பஞ்சமி யோகத்தின் சுப பலன்கள் இதோ!
வாஸ்து படி, வீட்டில் கற்றாழை செடியை வைத்திருப்பது மிகவும் மங்களகரமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த செடியை நடும் போது சில விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியம். கற்றாழைச் செடியை சரியான திசையில் நடுவது லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தை எப்போதும் கொண்டு வரும். செல்வம் பெருகும். இந்த செடி வீட்டில் இருந்தால், குடும்பம் முழுவதும் செழிப்புடன் இருக்கும். அவர்களின் புகழும், கௌரவமும் அதிகரிக்கும்.
கற்றாழை எந்த திசையில் நட வேண்டும்?
வீட்டில் கற்றாழை செடியை நடும் போது திசை மிகவும் முக்ககியம். அதற்கு நாம் குறிப்பாக சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் லட்சுமி தேவியின் அருளைப் பெற முடியும். இதற்கு கற்றாழை செடியை எப்போதும் கிழக்கு திசையில்தான் நட வேண்டும். இந்த திசையில் ஒரு கற்றாழை வைப்பது மன அமைதியைத் தருகிறது. வீட்டை வடக்கு அல்லது கிழக்கு திசையில் உயர்த்தினால் நேர்மறை ஆற்றல் கிடைக்கும். உடல்நலக் கோளாறுகள் நீங்கும்.