தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Tirupati: திருப்பதி போற பிளான் இருக்கா? - கொஞ்சம் யோசிச்சு போங்க

Tirupati: திருப்பதி போற பிளான் இருக்கா? - கொஞ்சம் யோசிச்சு போங்க

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 08, 2023 10:59 AM IST

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசன பக்தர்கள் 43 மணி நேரம் காத்திருக்கின்றனர்.

திருப்பதி
திருப்பதி

தற்போது கோடை விடுமுறை தொடங்கிவிட்ட காரணத்தினால் ஏராளமான பக்தர்கள் திருமலை நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளனர். இதனால் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

அதே சமயம் இலவச தரிசனம் டோக்கன் கூடப் பெறாமல் நேராக வைகுண்டம் வரிசையில் ஏராளமான பக்தர்கள் வந்து நின்று காத்திருக்கின்றனர். இவர்கள் சுவாமியைத் தரிசனம் செய்ய 43 மணி நேரம் ஆகிறது. இதனால் வைகுண்டத்தில் உள்ள 31 கம்பார்ட்மென்ட்களிலும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகின்றன.

பக்தர்களின் வரிசை மட்டுமே இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு உள்ளது. இதன் காரணமாகத் திருமலைக்குத் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்களது ஆன்மீக யாத்திரையில் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். அதே சமயம் தங்களது முறை வரும் வரை பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் எனத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் கொடுத்துள்ளது.

பக்தர்களின் கூட்டம் அலைமோதுகின்ற காரணத்தினால் உடனுக்குடன் உண்டியல் காணிக்கை எண்ணப்படுகிறது. நேற்று முன்தினம் ஒரு நாள் என்ன பட்டதில் உண்டியல் காணிக்கை 4 கோடியே 3 லட்சம் கிடைத்துள்ளதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் சில பகுதிகளில் கோடை விடுமுறை தொடங்காத காரணத்தினால், பின்வரும் காலங்களில் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்