Daily Horoscope: ’மேஷம் முதல் மீனம் வரை!’ இந்த நாளில் அசத்த போகும் ராசி எது? சொதப்ப போகும் ராசி எது? இன்றைய ராசிபலன்கள்!-daily horoscope results for 2nd september mesham to meenam zodiac overview - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Daily Horoscope: ’மேஷம் முதல் மீனம் வரை!’ இந்த நாளில் அசத்த போகும் ராசி எது? சொதப்ப போகும் ராசி எது? இன்றைய ராசிபலன்கள்!

Daily Horoscope: ’மேஷம் முதல் மீனம் வரை!’ இந்த நாளில் அசத்த போகும் ராசி எது? சொதப்ப போகும் ராசி எது? இன்றைய ராசிபலன்கள்!

Kathiravan V HT Tamil
Sep 02, 2024 07:00 AM IST

Daily Horoscope: ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒரு கிரகம் ஆட்சி செய்கிறது. கிரக விண்மீன்களின் இயக்கத்தால் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. செப்டம்பர் 2 ஆம் தேதி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும்,

Daily Horoscope: ’மேஷம் முதல் மீனம் வரை!’ இந்த நாளில் அசத்த போகும் ராசி எது? சொதப்ப போகும் ராசி எது? இன்றைய ராசிபலன்கள்!
Daily Horoscope: ’மேஷம் முதல் மீனம் வரை!’ இந்த நாளில் அசத்த போகும் ராசி எது? சொதப்ப போகும் ராசி எது? இன்றைய ராசிபலன்கள்!

மேஷம்

மேஷம் ராசிக்காரர்களுக்கு இந்த நாள் தன்னம்பிக்கை நிறைந்து காணப்படும். தேவையற்ற கோபத்தையும் விவாதத்தையும் தவிர்க்கவும். வியாபாரத்தில் பரபரப்பு அதிகமாக இருக்கும். இந்த நாளில் உங்கள் நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். மன நிம்மதி இருக்கும், ஆனால் செலவுகள் அதிகமாக இருப்பதால் கவலையில் இருப்பீர்கள். எதிர்மறை எண்ணங்களை தவிர்க்கவும். ஆன்மீக வழிபாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். 

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த நாள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். பேச்சில் நிதானமாக இருங்கள். தந்தையின் உடல் நலம் மேம்படும். மனதில் ஏமாற்றம், திருப்தி போன்ற உணர்வுகள் ஏற்படும். குடும்பத்தில் ஆன்மிக காரியங்கள் நடைபெறும். பணவரவு சீரானதாக இருக்கும். 

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு திருமண வாழ்கையில் மகிழ்ச்சி இருக்கும். ஆன்மீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். சொத்துக்களைப் பராமரித்தலில் செலவுகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கோபம் கொள்வதை தவிர்த்து அமைதியை பின்பற்றுங்கள். தந்தைக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்படலாம். நீங்கள் குடும்பத்துடன் ஒரு புனித ஸ்தலத்திற்கு பயணம் செல்லலாம். தேவையற்ற கோபத்தை கட்டுப்படுத்துங்கள்.

கடகம்

கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த நாள் மன அமைதி நிறைந்ததாக இருக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடியுங்கள். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். பெற்றோர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். இந்த நாள் செலவுகள் நிறைந்து காணப்படும். கலை மற்றும் இசையில் நாட்டம் இருக்கும். பேச்சில் அமைதி நிலவும். உடல்நலக் கோளாறுகள் ஏற்படலாம். வாழ்க்கைத் துணைக்கு ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படலாம். 

சிம்மம்

சிம்மம் ராசிக்கு மனம் தொந்தரவு ஏற்படலாம். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகளுக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்படலாம். ஆடை, ஆபரணங்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். கல்வி மற்றும் அறிவுசார் வேலைகளில் சிரமங்கள் இருக்கலாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் மனதில் எதிர்மறை எண்ணங்கள் ஏற்படுவதை தவிர்க்கவும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களுக்கு கூடுதல் பொறுப்புகள் ஏற்படும். பணிச்சுமை கூடுதலாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும் என்பதால் சுய கட்டுப்பாட்டுடன் இருங்கள். வீண் சச்சரவுகளைத் தவிர்க்கவும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம்.

துலாம்

துலாம் ராசிக்கு மனதில் எதிர்மறை எண்ணங்கள் ஏற்படலாம். அர்த்தமற்ற கோபத்தைத் தவிர்க்கவும். நேர்முகத் தேர்வுகளில் மகிழ்ச்சி நிறைந்த முடிவுகள் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். வேலையில் உற்சாகம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். ரத்தம் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படலாம். வியாபார விவகாரங்களில் நண்பரின் ஆதரவு கிடைக்கும். உத்யோகத்தில் வீண் செலவுகளை சந்திக்க நேரிடும்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்கள் இந்த நாளில் தன்னடக்கத்துடன் இருப்பது அவசியம். கோபத்தை தவிர்க்கவும். கல்விப் பணிகளில் மகிழ்ச்சி தரும் பலன்கள் கிடைக்கும். உடை மற்றும் வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கலாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கலை மற்றும் இசையில் உங்களுக்கு ஆர்வம் ஏற்படும். குடும்ப பிரச்சினைகள் தொந்தரவாக இருக்கலாம். உத்தியோகத்தில் சிலருக்கு மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு கலை மற்றும் இசையில் நாட்டம் அதிகரிக்கும். உத்யோகத்தில் வீண் செலவுகளை சந்திக்க நேரிடும். நண்பரின் உதவியால் வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பேச்சில் கவனமாக இருப்பது அவசியம்.

மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. வேலையில் பணிச்சுமை அதிகரிக்கும். புதிய வாகன யோகம் உண்டாகும். செலவுகள் அதிகரிக்கும். மன அமைதி கிடைக்கும். குடும்ப சொத்துக்கள் மூலம் பணம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. பூர்வீக சொத்துக்கள் மூலம் பணவரவு உண்டாகும். 

கும்பம்

கும்பம் ராசிக்காரர்களில் சிலர் உத்தியோக நிமித்தம் காரணமாக குடும்பத்தை விட்டு விலகி இருக்க நேரிடலாம். பேச்சில் நிதானமாக இருங்கள். உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள். பொறுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். தன்னம்பிக்கை நிறைந்தவராக இருப்பீர்கள். 

மீனம்

மீனம் ராசிக்காரர்களுக்கு மனம் மகிழ்ச்சியாக இருக்கும். பூர்வீக சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். திட்டமிடப்படாத செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற கோபத்தையும் விவாதத்தையும் தவிர்க்கவும். கடின உழைப்பு அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். பழைய நண்பர்கள் உங்களை தொடர்பு கொள்ளலாம். சுற்றுலா செல்லும் வாய்ப்புகள் உள்ளன.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.