Daily Horoscope: ’மேஷம் முதல் மீனம் வரை!’ இந்த நாளில் அசத்த போகும் ராசி எது? சொதப்ப போகும் ராசி எது? இன்றைய ராசிபலன்கள்!-daily horoscope results for 26th september mesham to meenam zodiac overview - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Daily Horoscope: ’மேஷம் முதல் மீனம் வரை!’ இந்த நாளில் அசத்த போகும் ராசி எது? சொதப்ப போகும் ராசி எது? இன்றைய ராசிபலன்கள்!

Daily Horoscope: ’மேஷம் முதல் மீனம் வரை!’ இந்த நாளில் அசத்த போகும் ராசி எது? சொதப்ப போகும் ராசி எது? இன்றைய ராசிபலன்கள்!

Kathiravan V HT Tamil
Sep 26, 2024 06:00 AM IST

Daily Horoscope: ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒரு கிரகம் ஆட்சி செய்கிறது. கிரக விண்மீன்களின் இயக்கத்தால் ஜாதகம் கணக்கிடப்படுகிறது.

Daily Horoscope: ’மேஷம் முதல் மீனம் வரை!’ இந்த நாளில் அசத்த போகும் ராசி எது? சொதப்ப போகும் ராசி எது? இன்றைய ராசிபலன்கள்!
Daily Horoscope: ’மேஷம் முதல் மீனம் வரை!’ இந்த நாளில் அசத்த போகும் ராசி எது? சொதப்ப போகும் ராசி எது? இன்றைய ராசிபலன்கள்!

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் காதல் நிறைந்து இருக்கும். உங்கள் வீட்டில் விருந்தினர் வருகை இருக்கும். சோம்பல் இருக்கும் என்பதால் முன்கூடியே திட்டமிடுவது முக்கியம். பணியிடத்தில் நீங்கள் நினைத்ததை செய்து முடிப்பீர்கள். சிலர் வருமானத்தை அதிகரிக்க புதிய வழிகளை கண்டுபிடிப்பார்கள்.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு  ஆரோக்கியம் குறித்த கவலைகள் எழலாம். மற்றவர்களை மகிழ்விக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு மன வருத்தத்தை தரலாம். புத்திசாலிகள் உடனான தொடர்புகள் ஏற்படும். வாழ்கை துணையை மகிழ்விக்க முயற்சி செய்யுங்கள். 

மிதுனம்

மிதுனம் ராசியை சேர்ந்த மாணவர்கள் சிறப்பாக படித்து முன்னேறுவீர்கள். வணிகத்தில் நஷ்டம் அடைந்தவர்கள் கடின உழைப்பை செலுத்தினால் வெற்றி பெற முடியும். நீங்கள் எடுக்கும் சில முடிவுகளுக்கு குடும்பத்தினர் ஆதரவு இருக்காது. உங்களது திட்டம் உங்களை கௌரவமான நிலைக்கு உயர்த்தும். வாழ்கை துணை உடன் நேரம் செலவிடுங்கள். 

கடகம்

கடகம் ராசிக்காரர்கள் கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டிய நாள். புதிய முயற்சிகளை தொடங்குவீர்கள். பணியில் நிதானமாக செயல்படுங்கள். பிரச்னைகள் காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புங்கள். ஒரு புதிய பயணம் உங்களுக்காக காத்திருக்கிறது.

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்கள் அனைத்து பொறுப்புகளையும் இழுத்து போட்டுக்கொண்டு செய்ய வேண்டாம். சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். குடும்பத்துடன் நேரம் செலவிடுவீர்கள். பணியில் அதிக வேலை பளுவுடன் இருக்கும் போது உதவி கேட்க தயங்க வேண்டாம். பணிச்சுமையை பகிர்ந்து கொள்வது மன ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த நாள் சிறப்பான நாளாக இருக்கும். நீங்கள் ஒருவரிடம் இருந்து ஆச்சரியங்களை பெறலாம். தொழில் மற்றும் வியாபாரம் மிகச் சிறப்பாக இருக்கும். மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். சிலருக்கு ஒப்பந்தம் மூலம் லாபம் கிடைக்கும். உங்கள் வங்கி இருப்பை அதிகரிக்க புதிய வழிகளைக் காண்பீர்கள். உறவுகளைப் பேணுவது சில நேரங்களில் கடினமாக உணரலாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் பணத்தை இன்று சிக்கனமாக செலவு செய்வீர்கள். காதல் வாழ்க்கையில் உள்ள பிரச்னைகள் குறித்து கவலைப்படுவீர்கள். இன்றைய எந்த வாய்ப்புகளையும் தவறவிட வேண்டாம். மகிழ்ச்சியில் மற்றவர்களையும் ஈடுபடுத்த முயலுங்கள். 

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சொத்து பிரச்சினைகள் தீரும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. மாணவர்கள் படிப்பில் கடுமையாக உழைக்க வேண்டிய நேரம் இது. உங்கள் திறனுக்கு ஏற்றவாறு உழைப்பது வெகுமதியை தரும். வாழ்கை துணை உடன் வெளியில் செல்வது மகிழ்ச்சியை தரும். 

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு வசூல் ஆகாத பாக்கிகள் வசூல் ஆகும். வாழ்க்கையில் சமநிலை இருப்பது முக்கியம். செலவுகளை மிக கவனமுடன் செயல்படுங்கள். குடும்ப பிரச்சினைகளை பேசித் தீர்பீர்கள். வேலைகளை அதிக அழுத்தத்தின் மத்தியில் செய்ய வேண்டாம்.  

மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொண்டாடங்கள் நிறைந்து இருக்கும். பல சிறந்த வாய்ப்புகள் உங்களுக்காக காத்துக் கொண்டு உள்ளது. நீங்கள் சாதித்தவற்றில் கவனம் செலுத்துங்கள். நேர்மறையான மாற்றங்களில் கவனம் செலுத்துங்கள். உங்கள் வாழ்க்கையில் ஒரு மகிழ்ச்சியான நேரத்தை அனுபவிப்பீர்கள். தொழில் சிறப்பாக இருக்கும். 

கும்பம்

கும்பம் ராசிக்காரர்களுக்கு புகழ்ம் மகிழ்ச்சி உயரும். சொத்து விவகாரங்களை கவனமுடன் கையாள வேண்டும். இதனால் சில தொந்தரவுகளை சந்திக்க நேரிடலாம். பணியிடத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். பணவரவு சீராக இருக்கும். பண பிரச்னைகளை கவனமாக தீர்ப்பீர்கள். 

மீனம்

மீனம் ராசிக்காரர்களுக்கு முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். நேர்மறையான சிந்தனை உடன் இந்த நாளை அனுக வேண்டும். உங்கள் திறமையால் சவால்களை சமாளிப்பீர்கள். சிலருக்கு இன்று வேலை நிமித்தமாக பயணம் மேற்கொள்ள நேரிடும். குடும்ப உறவுகள் சிறக்கும். 

Whats_app_banner