Money Luck: ’மேஷம் முதல் கன்னி லக்னம் வரை!’ உங்களை பண மழையில் நனைய வைக்கும் கிரகங்களும், பலன்களும்…!-benefits of money lord planet in lagna for mesham to kanni ascendants - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Luck: ’மேஷம் முதல் கன்னி லக்னம் வரை!’ உங்களை பண மழையில் நனைய வைக்கும் கிரகங்களும், பலன்களும்…!

Money Luck: ’மேஷம் முதல் கன்னி லக்னம் வரை!’ உங்களை பண மழையில் நனைய வைக்கும் கிரகங்களும், பலன்களும்…!

Kathiravan V HT Tamil
Sep 25, 2024 04:41 PM IST

Money Luck: லக்னத்தில் தனாதிபதி இருந்தால் ஜாதகருக்கு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற் ஆசை அதிகமாக இருக்கும். ஜாதகரின் கண்ணோட்டம் பணம் சார்ந்ததாகவே இருக்கும்.

Money Luck: ’மேஷம் முதல் கன்னி லக்னம் வரை!’ உங்களை பண மழையில் நனைய வைக்கும் கிரகங்களும், பலன்களும்…!
Money Luck: ’மேஷம் முதல் கன்னி லக்னம் வரை!’ உங்களை பண மழையில் நனைய வைக்கும் கிரகங்களும், பலன்களும்…!

மேஷம் முதல் கன்னி வரையிலான லக்னங்களுக்கு தனாதிபதி லக்னத்தில் அமர்வதால் ஏற்படும் பலன்கள்:-

மேஷம்

மேஷ லக்னத்துக்கு தனாதிபதியா வரக்கூடியவர் சுக்கிரன். இவர் 2 மற்றும் 7ஆம் வீட்டிற்கு அதிபதி ஆவார். ஜாதகர் அழகுணர்ச்சி மிக்கவராக இருப்பார். திருமணத்துக்கு பிறகு பொருளாதார வளர்ச்சி, கூட்டுத் தொழிலில் ஆதாயம் உண்டாகும். வாழ்கை துணை மூலம் பொருளாதார வளர்ச்சி உண்டாகும். வாழ்கை துணையால் மகிழ்ச்சி, புத்திசாலித்தனம் ஏற்படும். குழந்தைகள் பிறந்த பிறகு முன்னேற்றம் உண்டாகும். அறிவு சார் விவகாரங்கள் மூலம் பணம் ஈட்டுவார்கள். 

ரிஷபம் 

ரிஷப லக்னத்திற்கு தனாதிபதியாக புதன் பகவான் வருகிறார். இவர் லக்னத்தில் வரும் போது திக்பலம் பெறுவார். இவர்களுக்கு திருமண வாழ்கை சிறப்பாக இருக்கும். திருமணத்திற்கு பிறகு வளர்ச்சி உண்டாகும். குழந்தைகள் பிறப்பிற்கு பிறகு மிக சிறப்பான பொருளாதார நிலையை ஜாதகர் அடைவார். அறிவுசார் விஷயங்கள் மூலம் ஜாதகர் பொருள் ஈட்டுவார். அறிவாற்றல், ஞாபக சக்தி, கடும் உழைப்பு நிறைந்தவராக ஜாதகர் இருப்பார்.  

மிதுனம் 

மிதுன லக்னத்துக்கு தனாதிபதி சந்திரன் என்பதால் இவர்களின் பொருளாதர நிலை வளர்வதும், தேய்வதுமான இயல்பை கொண்டவர். இவர்களுக்கு பணத்தை காப்பாற்றி கொள்ளும் தன்மை குறைவாக இருக்கும். அதிகம் செலவு செய்பவர் ஆக இருப்பார். இவர்கள் பண விஷயத்தில் மிக சிக்கனமாக இருந்தால் வளர்ச்சி ஏற்படும்.  

கடகம் 

கடக லக்னத்துக்கு சூரியன் தனாதிபதி ஆவார். சூரியன் லக்னத்தில் அமர்வது மிக சிறப்பு ஆகும். அரசு, அரசாங்கம் மூலம் நன்மை, தகப்பன் வழி சொத்துக்கள் கிடைப்பது, அரசாங்க அதிகாரத்தில் இருப்பது உள்ளிட்ட நன்மைகளை தரும். பணம் சம்பாதிப்பதில் முழு குறிக்கோள் உடன் இருப்பார்கள். 

சிம்மம் 

சிம்ம லக்னத்துக்கு தனாதிபதியும் லாபாதிபதியும் புதன் பகவான் ஆவார். இவர் லக்னத்தில் அமர்ந்தால் திக்பலம் பெறுவார். இவர்கள் புத்தியை முன் வைத்து பணம் ஈட்டுவார்கள். சாதுர்யமாக பேசி சாணக்கியதனமாக காரியம் சாதிப்பார்கள். தனது லாப நோக்கத்தில் மிக கவனமாக இருப்பார்கள்.

கன்னி 

கன்னி லக்ன ஜாதகர்களுக்கு தனாபதிபதியான சுக்கிரன் லக்னத்தில் நீசம் அடைகிறார். இதனால் பணத்தை விரையும் செய்யும் அமைப்பு இயற்கையிலேயே இருக்கும். இதனால் குடும்பத்தினரை கைவிடும் சூழல் கூட உண்டாகும். இவர்கள் நண்பர்கள், கூட்டாளிகள், உறவினர்கள் விஷயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும். சுக்கிரனுக்கு நீசபங்கம் கிடைத்தால் மிக சிறப்பாக இருப்பார்கள். வாழ்கை துணையிடம் உண்மையாக இருக்கும் போது வாழ்கை சிறக்கும். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner