Daily Horoscope: ’மேஷம் முதல் மீனம் வரை!’ இந்த நாளில் அசத்த போகும் ராசி எது? சொதப்ப போகும் ராசி எது? இன்றைய ராசிபலன்கள்!-daily horoscope results for 18th september mesham to meenam zodiac overview - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Daily Horoscope: ’மேஷம் முதல் மீனம் வரை!’ இந்த நாளில் அசத்த போகும் ராசி எது? சொதப்ப போகும் ராசி எது? இன்றைய ராசிபலன்கள்!

Daily Horoscope: ’மேஷம் முதல் மீனம் வரை!’ இந்த நாளில் அசத்த போகும் ராசி எது? சொதப்ப போகும் ராசி எது? இன்றைய ராசிபலன்கள்!

Kathiravan V HT Tamil
Sep 18, 2024 06:40 AM IST

Daily Horoscope: ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒரு கிரகம் ஆட்சி செய்கிறது. கிரக விண்மீன்களின் இயக்கத்தால் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. செப்டம்பர் 9ஆம் தேதி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.

Daily Horoscope: ’மேஷம் முதல் மீனம் வரை!’ இந்த நாளில் அசத்த போகும் ராசி எது? சொதப்ப போகும் ராசி எது? இன்றைய ராசிபலன்கள்!
Daily Horoscope: ’மேஷம் முதல் மீனம் வரை!’ இந்த நாளில் அசத்த போகும் ராசி எது? சொதப்ப போகும் ராசி எது? இன்றைய ராசிபலன்கள்!

மேஷம் 

மேஷ ராசிக்காரர்களின் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். பணம் சம்பந்தமான பிரச்சனைகள் தீரும். குடும்பத்துடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். தொழில் ரீதியாக சில நல்ல செய்திகளைப் பெறலாம்.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்கள் பணம் விவகாரத்தில் கவனமாக செயல்படுவது அவசியம். வரவு, செலவு கணக்கு போட்டு பணம் செலவு செய்வது நல்லது. புதிய யோசனைகளுடன் அலுவலக கூட்டங்களுக்கு செல்லவும். சீனியர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். சொத்து தொடர்பான விவகாரங்களில் நண்பர்கள்  உதவுவார்கள். 

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு பணம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் வேலையில் வெற்றி பெறுவீர்கள். சிலர் நிலம், கட்டிடம், வாகனம் வாங்குவீர்கள். தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம்.

கடகம்

கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த நாள் சீரானதாக இருக்கும். சில முக்கியமான வேலைகளில் வெற்றி பெறுவது உங்கள் புகழை உயர்த்தும். எந்த ஒரு வேலையைச் செய்யும்போதும் ஆராய்ச்சி செய்து முடிவுகளை எடுங்கள். பயண வாய்ப்புகள் உண்டு. கல்விப் பணிகளில் வெற்றி பெறலாம்.

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்களுக்கு முதலீடு மூலம் லாபம் கிடைக்கும். உடல்நிலை நன்றாக இருக்கும். அலுவலகத்தில் ஒரு திட்டத்தை வழிநடத்தும் வாய்ப்பைப் பெறலாம். இன்று குடும்ப உறுப்பினர் ஒருவரிடமிருந்து உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். வியாபாரிகளுக்கு நல்ல நாள்.

கன்னி

கன்னி ராசிக்கார்களுக்கு இன்று பொருளாதார ரீதியாக சீரான நாளாக இருக்கும். உங்கள் ஆற்றல் நன்றாக இருக்கும். நீண்ட தூர பயணங்களை தவிர்க்கவும். நீங்கள் ஏதேனும் ஒரு சொத்தை விற்க திட்டமிட்டிருந்தால் அது சிறப்பாக முடியும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைப்பது குறைவு. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்கள் வெற்றி பெறுவீர்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு உடல்நலம் மற்றும் நிதி நிலை சாதகமாக இருக்கும். ஒரு திட்டத்தின் வேலையை முடிக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் உயர்வு இருக்கும். உங்கள் பிள்ளைகளிடம் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கலாம்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது முக்கியம். உயர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பை பேணுங்கள். எந்த விவாதத்தில் இருந்தும் விலகி இருங்கள். பயணத்தின் போது கவனமாக இருங்கள். கல்வித்துறையில் நல்ல செய்திகளைப் பெறலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களின் நிதி நிலைமை நன்றாக இருக்கும். ஆனால் உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். இன்று நீங்கள் வணிகம் தொடர்பான சில முக்கிய முடிவுகளை எடுக்கலாம். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். இன்று உங்களுக்கு நெருக்கமான ஒருவருடன் சுற்றுலா செல்லலாம். புதிய நிதி ஆதாரங்கள் உருவாகும்.

மகரம்

மகரம் ராசிக்காரரக்ளுக்கு உடல்நிலை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் பணியிடத்தில் கவனமாக இருக்க வேண்டும். எந்தவொரு பெரிய நிதி முடிவை எடுப்பதற்கு முன் நிதி நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் இருக்கும்.

கும்பம்

கும்பம் ராசிக்காரர்களுக்கு இன்று அலுவலகத்தில் சில முக்கியமான திட்டங்களைப் பெறலாம். மூத்தவர்கள் உங்கள் வேலையை அங்கீகரிப்பார்கள். உங்கள் பணி பாராட்டப்படலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உங்கள் நிதி நிலைமை சாதாரணமாக இருக்கும். வருமானத்திற்கும் செலவிற்கும் இடையில் சமநிலையை பராமரிப்பது முக்கியம். குடும்பத்துடன் சுற்றுலா செல்லலாம்.

மீனம்

மீனம் ராசிக்காரர்களுக்கு சேமிப்பிற்கான முயற்சிகள் பலனளிக்கும். பணத்தை சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள். இன்று வேலைக்கும் குடும்பத்திற்கும் இடையே சமநிலையை ஏற்படுத்துவது எளிதாக இருக்கும். கல்வி, வணிகம் மற்றும் நிதி சார்ந்த விஷயங்கள் சிறப்பாக இருக்கும். 

Whats_app_banner