பணம் சம்பாதிப்பதில் புரட்டி எடுக்க போகும் மகரம் ராசி! புரட்டாசி மாத ராசிபலன்கள்!

By Kathiravan V
Sep 17, 2024

Hindustan Times
Tamil

புரட்டாசி மாதம் சூரிய பகவான் கன்னி ராசியிலே சஞ்சாரம் செய்யக்கூடிய ஒரு அற்புதமான காலம் ஆகும்.  கன்னி ராசியில் கேது பகவான் இருக்கின்றார் அவரோடு சேர்ந்து சூரியன் புதன் இந்த இரண்டு கோள்களும் கன்னி ராசியிலே சஞ்சாரம் செய்கின்றன. 

புரட்டாசி மாதம் 25 ஆம் தேதி குரு பகவான் வக்ரம் பெறுகிறார்.  சனி பகவான் கும்ப ராசியிலும், புதன் பகவான் கன்னி ராசியிலும், சுக்கிரன் துலாம் ராசியிலும் ஆட்சி பலம் பெற்று இருக்கிறார்.

 மகாலட்சுமியின் வீடாக விளங்கக்கூடிய ரிஷபத்தில் குருபகவான் வக்கிர நிலையிலே அமைந்திருக்கிறார். குரு, சூரியன் திரிகோண தொடர்பும், சனிக்கும் குருவுக்கும் கேந்திர தொடர்பும் ஏற்படுகிறது. 

மகர ராசிக்கு புரட்டாசி மாதம் அதிஅற்புதமான மாதமாக அமைகிறது. உத்தியோகத்தில் கவனம் செலுத்த வேண்டும். ராசிக்கு ஐந்தில் இருக்கக்கூடிய குருபகவானால் நன்மை ஏற்படும். உங்களுக்கு வரவேண்டிய பணவரவுகள் வந்து சேரும். மேலும் கடன் சுமைகள் குறையக்கூடிய மாதமாக இந்த மாதம் அமைகிறது. 

வேலை செய்யும் இடத்தில் உள்ள சட்ட சிக்கல்கள், உயர் அதிகாரிகள் உடனான பிரச்னைகள், அவமானம், தலைகுணிவுகள் உள்ளிட்ட பிரச்னைகள் சரியாகும்.  காலபைரவர், வாராஹி வழிபாடு கை கொடுக்கும். 

வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு புதிய வேலைகள் கிடைக்கும்.  தொழில், வியாபாரங்கள் சிறப்பாக இருக்கும்.  தொழில் சார்ந்த பின்னடைவுகளை கவனமாக கவனித்து செயல்படவும். 

வம்பு வழக்குகள் குறையும், குடும்பத்தில் கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்த கணவன் மனைவி மீண்டும் ஒன்று சேர்வதற்கு வாய்ப்புகள் உண்டு.  பிரிந்த உறவுகள் மீண்டும் இணையும் வாய்ப்புகள் உள்ளது. 

திருமணம் ஆகாத மகரம் ராசிக்காரர்களுக்கு திருமணம் கைக்கூடும். தம்பதிகளுக்கு இடையே தாம்பத்தியம் சிறப்பாக இருக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். 

மக்காச்சோளம் சாப்பிடுவதால் கிடைக்கும் 6 முக்கிய பலன்கள் இதோ!

Pexels