மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று நவ.16 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று நவ.16 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க..!

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று நவ.16 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க..!

Karthikeyan S HT Tamil
Nov 16, 2024 06:22 AM IST

மேஷம் ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினருக்கு இன்று (நவம்பர் 16) வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி விரிவாக இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று நவ.16 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க..!
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று நவ.16 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க..!

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசி உள்ளிட்ட 6 ராசியினருக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

மேஷம்

சிந்தனை மற்றும் பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வருமான உயர்வுக்கான சிந்தனைகள் அதிகரிக்கும். நுட்பமான சிந்தனைகள் மூலம் பலரின் அறிமுகங்களை உருவாக்குவீர்கள். உயர்கல்வி தொடர்பான குழப்பங்களில் தெளிவுகள் ஏற்படும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளை எதிர்பார்க்கலாம்.

ரிஷபம்

புதிய முதலீடுகளில் கவனம் தேவை. கால்நடை விஷயங்களில் ஆதாயம் ஏற்படும். வெளியூர் தொடர்பான வணிகத்தில் முன்னேற்றம் உண்டாகும். தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். கடன் செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். சமூகப் பணிகளில் வித்தியாசமான வாய்ப்புகள் ஏற்படும். இணையம் சார்ந்த துறைகளில் அனுபவம் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

மிதுனம்

குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். செய்யும் முயற்சிகளில் புதிய அனுபவம் உண்டாகும். வருமானம் குறித்த சிந்தனைகள் மேம்படும். வியாபார அபிவிருத்திக்கான வாய்ப்புகள் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் இடத்தில் கனிவு வேண்டும். பூர்வீக சொத்துக்கள் மூலம் விரயங்கள் உண்டாகும். மனைவியுடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம். அறிவுசார் பணிகளில் அதிக ஈடுபாடு உண்டாகும்.

கடகம்

உங்கள் கருத்துகளுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஆதரவுகள் மேம்படும். தனிப்பட்ட பிரச்சனைகளுக்குத் தெளிவு உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். போட்டிகளில் சாதகமான சூழல் அமையும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்

வியாபார பணிகளில் திடீர் வரவுகள் ஏற்படும். சகோதர வகையில் அனுசரித்துச் செல்லவும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதைத் தவிர்க்கவும். உத்தியோகப் பணிகளில் மாற்றங்கள் உண்டாகும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். சில நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டங்கள் ஏற்படும். அரசு சார்ந்த விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும்.

கன்னி

கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சட்டம் சார்ந்த சில நுணுக்கங்களை அறிவீர்கள். வரவுகளில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். நேர்மைக்குண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்