Chinese Horoscope October 2024: ’சீன ஜோதிடத்தில் நீங்க புலியா? இல்ல எலியா?’ அக்டோபர் மாத சீன ராசி பலன்கள்!-chinese horoscope october 2024 monthly predictions as per your chinese zodiac - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Chinese Horoscope October 2024: ’சீன ஜோதிடத்தில் நீங்க புலியா? இல்ல எலியா?’ அக்டோபர் மாத சீன ராசி பலன்கள்!

Chinese Horoscope October 2024: ’சீன ஜோதிடத்தில் நீங்க புலியா? இல்ல எலியா?’ அக்டோபர் மாத சீன ராசி பலன்கள்!

Kathiravan V HT Tamil
Oct 02, 2024 08:13 PM IST

Chinese Horoscope October 2024: சீன ஜாதகம் என்பது சீன சந்திர நாட்காட்டியை அடிப்படையாகக் கொண்ட ஜோதிட அமைப்பாகும். இது எதிர்காலத்தை கணிக்கவும் ஆளுமை பண்புகளை புரிந்து கொள்ளவும் பயன்படுகிறது. சீன ராசியானது 12 விலங்குகளால் ஆனது, ஒவ்வொன்றும் வெவ்வேறு ஆண்டைக் குறிக்கும்.

Read the Chinese Horoscope October 2024 for all zodiac signs.
Read the Chinese Horoscope October 2024 for all zodiac signs. (Freepik)

எலி (1948, 1960, 1972, 1984, 1996, 2008, 2020 ஆண்டுகளில் பிறந்தவர்கள்)

இந்த மாதம் ஒரு வேடிக்கையான மற்றும் கலகலப்பான மாதமாக இருக்கும். இது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவிடுவீர்கள். உங்கள் படைப்பாற்றல் கூடும். உங்கள் யோசனைகளை தெளிவடைய செல்லும். நேர்மறையான அனுபவங்களை பெறுவீர்கள். 

எருது (1949, 1961, 1973, 1985, 1997, 2009, 2021 ஆண்டுகளில் பிறந்தவர்கள்)

இந்த மாதத்தில் நிதி விவகாரங்களில் மிக கவனமாக இருக்க வேண்டும். உங்கள் கனவுகள் நனவாகும். உங்கள் திறன்களை நம்பி செயல்படுங்கள். இலக்கிய வாசிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். 

புலி (1950, 1962, 1974, 1986, 1998, 2010, 2022 ஆண்டுகளில் பிறந்தவர்கள்)

புலி ஆண்டில் பிறந்தவர்கள் இந்த மாதத்தில் ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். நேரத்தை ஆற்றலுடன் பயன்படுத்தி கொள்வீர்கள். தியானம், வழிபாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான வாழ்கையில் ஈடுபாடு அதிகரிக்கும். 

முயல் (1951, 1963, 1975, 1987, 1999, 2011, 2023 ஆண்டுகளில் பிறந்தவர்கள்)

முயல் ஆண்டில் பிறந்தவர்களுக்கு அக்டோபர் அன்பையும் கருணையையும் அளிக்கும் ஆண்டாக இருக்கும். காதல் உறவுகள் சிறப்பு அடையும். காதல் துணைக்கு ஆதரவாக செயல்படுவீர்கள். காதல் துணையின் கோரிக்கைகளை கவனமாக கேட்டு செயல்படுத்துவீர்கள். 

டிராகன் (1940, 1952, 1964, 1976, 1988, 2000, 2012, 2024 ஆண்டுகளில் பிறந்தவர்கள்) 

இந்த மாதம் துடிப்பான மாதமாக அமையும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். பழைய நினைவுகள் வந்து போகும். மன அழுத்தங்களில் இருந்து விடுபடுவீர்கள். வாழ்கை மகிழ்ச்சியாக இருக்கும், இந்த மாதத்தில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். 

பாம்பு (1941, 1953, 1965, 1977, 1989, 2001, 2013 ஆண்டுகளில் பிறந்தவர்கள்)

அக்டோபர் மாதத்தில் உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வீர்கள். தன்னார்வத் தொண்டு பணிகளில் ஈடுபடலாம். நேர்மறையான சிந்தனை ஆற்றலை கொண்டுவரும். நிதானமாக செயல்பட்டு வெற்றிகளை குவிப்பீர்கள்.

குதிரை (1942, 1954, 1966, 1978, 1990, 2002, 2014 ஆண்டுகளில் பிறந்தவர்கள்)

இந்த மாதம் காதல் வாழ்கை மகிழ்ச்சியாக இருக்கும். செயல்பாடுகளில் இருந்த தடைகள் விலகி ஆனந்தம் தரும் அச்சங்களை கடந்து செயல்படும் போது வெற்றிகள் கிட்டும். .

ஆடு (1943, 1955, 1967, 1979, 1991, 2003, 2015 ஆண்டுகளில் பிறந்தவர்கள்)

உங்கள் உள் வலிமை கூடும். உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்துங்கள். யாரை பார்த்தும் பொறாமை கொள்ள வேண்டாம். பிடித்த உணவுகளை சாப்பிட்டு மகிழ்வீர்கள். படைப்பாற்றல் அதிகரிக்கும். வருத்தப்படாமல் இருக்க வேண்டிய நேரம் இது.

குரங்கு (1944, 1956, 1968, 1980, 1992, 2004, 2016 ஆண்டுகளில் பிறந்தவர்கள்)

இந்த மாதம் கற்றல் மற்றும் தேடல் மூலம் வளர்ச்சியை பார்ப்பீர்கள். புதிய யோசனைகள் வந்து போகும். புதிய கலச்சாரங்களில் தேடல் அதிகம் ஆகும். உங்கள் அறிவை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பைப் பெறுங்கள். மாற்றம் உங்களுக்காக காத்திருக்கிறது.

சேவல் (1945, 1957, 1969, 1981, 1993, 2005, 2017 ஆண்டுகளில் பிறந்தவர்கள்)

அக்டோபர் மாதம் உங்களை உறுதியாக வைத்து இருக்கும். நேர்மறை சிந்தனை உடன் செயல்படுவீர்கள். ஆக்கப்பூர்வ செயல்பாடுகளில் கவனம் செலுத்தவும். எதிர்மறை சிந்தனைகளை தவிர்க்கவும். 

நாய் (1946, 1958, 1970, 1982, 1994, 2006, 2018 ஆண்டுகளில் பிறந்தவர்கள்)

அக்டோபர் மாதத்தில் கவனமாக செயல்பட வேண்டியது முக்கியம். பிறருடன் பேசும் போது கோபம் கொள்ள வேண்டாம். நேர்மறை அணுகுமுறையுடன் செயல்படுங்கள். உங்கள் முயற்சிகளுக்கு தகுந்த வெகுமதிகள் கிடைக்கும். 

பன்றி (1947, 1959, 1971, 1983, 1995, 2007, 2019 ஆண்டுகளில் பிறந்தவர்கள்)

அக்டோபர் மாதம் ஏக்கம் அல்லது மனச்சோர்வின் உணர்வுகளைக் கொண்டு வரக்கூடும். இது கடந்த கால அனுபவங்களைப் பிரதிபலிக்கத் தூண்டும். இது உணர்ச்சி வலியைத் தூண்டக்கூடும். இனி வரும் காலம் பிரகாசமான நாட்களுக்கு வழிவகுக்கும்  கவனியுங்கள்.

Whats_app_banner