Magaram rasi: செவ்வாய் தட்டி தூக்க போகிறார்! முன்னோர்கள் ஆசியால் முன்னேற போகும் மகரம்! அடேங்கப்பா இவ்வளவு நன்மைகளா!
Chevvai Peyarchi: ராசிக்கு 5ஆம் இடமான ரிஷபம் ராசியில் குரு உடன் சேர்ந்து செவ்வாய் வருவதால் குரு மங்கள யோகம் உண்டாகின்றது. இந்த இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று அழைக்கப்படுகின்றது. இதனால் உங்கள் முன்னோர்கள் ஆசி உங்களுக்கு கிடைக்கும்.
மேஷம் ராசியில் இருந்த செவ்வாய் பகவான் கடந்த ஜூலை 11ஆம் தேதி பெயர்ச்சி ஆகி ரிஷபம் ராசிக்கு சென்று உள்ளார். இதனால் குரு பகவான் உடன் செவ்வாய் பகவான் சேர்வதால் குரு மங்கள யோகம் உண்டாகின்றது.
செல்வம், செல்வாக்கு, அந்தஸ்து, பதவி, நிலம், தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு உள்ளிட்டவை தரும் யோகமாக குரு மங்கள யோகம் உள்ளது. ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை செவ்வாய் பகவான் ரிஷபம் ராசியில் இருப்பார்.
இதனால் சாதாரணமாக இருப்பவர்களுக்கு புகழ், செல்வாக்கு, அந்தஸ்து, மரியாதைகள் கிடைக்கும். பூர்விக சொத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். நிலம், வீடு, வாகன வசதிகள் பெருகும்.
ராணுவம், காவல்துறையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். வேலை மூலம் புகழ், செல்வாக்குகள் கூடும். பெயர்ச்சி ஆகி உள்ள செவ்வாய் பகவான் சிம்மம், விருச்சிகம், தனுசு ஆகிய ராசிகளை பார்க்கின்றார்.
மகரம் ராசி பலன்கள்
நம்மிடம் பழகுபவர்களிடம் நாம் உண்மையாக இருப்பது போல், நம்மிடம் பழகுபவர்களும் உண்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மகரம் ராசிக்காரர்களுக்கு உண்டு. இந்த ஆடி மாத காலம் மகரம் ராசிக்கு நன்மை செய்யும் மாதமாக உள்ளது.
முன்னோர்கள் ஆசி கிடைக்கும்
ராசிக்கு 5ஆம் இடமான ரிஷபம் ராசியில் குரு உடன் சேர்ந்து செவ்வாய் வருவதால் குரு மங்கள யோகம் உண்டாகின்றது. இந்த இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று அழைக்கப்படுகின்றது. இதனால் உங்கள் முன்னோர்கள் ஆசி உங்களுக்கு கிடைக்கும்.
பயணங்கள் ஏற்படும்
இந்த நேரத்தில் முன்னோர்கள் ஆசியால் புத்திர பாக்கியம் கிடைக்கும். பயணங்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும். பயணம் சார்ந்த உத்யோகங்கள் அமையலாம்.
வராத தொகைகள் திரும்ப கிடைக்கும்
கணவன் மனைவி உறவு இந்த நேரத்தில் பலப்படும். பங்கு சந்தையில் லாபம் பெருகும். தொழில் கூட்டாளிகள் மூலம் லாபங்கள் அதிகரிக்கும். வழக்கில் இருந்த பிரச்னைகள் தீரும். நீண்ட காலமாக வராமல் இருந்த தொகைகள் திரும்பி வரும்.
சிவ வழிபாடு
சனி பகவானின் வக்ரம் மூலம் பிரச்னைகள் தீரும், உங்கள் உடன் பணிபுரியும் நபர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். நீரில் வாழும் உயிரினங்களுக்கு உணவு அளிப்பதன் மூலம் நன்மைகள் கிடைக்கும். சிவன், நடராஜர் வழிபாடு வாழ்கையில் நன்மைகளை ஏற்படுத்தி தரும். உடலை வருத்தி வேலை செய்யும் நபர்களுக்கு உதவி செய்வதன் மூலம் உங்களுக்கு கெடுபலன்கள் குறைந்து நற்பலன்கள் கிடைக்கும். ஆலயங்களில் நடைபெறும் உழவார பணிகளில் கலந்து கொண்டால் இறைவனின் ஆசி கிடைக்கும்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.