Chanakya Niti in Tamil: ’இதை செய்தால் புத்திசாலிகள் கூட துன்பம் அடைவார்கள்!’ சாணக்கியர் சொல்லும் அறிவுரை!
Chanakya Niti in Tamil: சாணக்ய நீதி என்பது அரசியல், பொருளாதாரம், தந்திரம், மனித நடத்தை மற்றும் வாழ்க்கை குறித்த ஆழமான அறிவு மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குகிறது. இது இந்தியாவில் மிகவும் மதிப்புமிக்க நூலாக கருதப்படுகிறது.
Chanakya Niti in Tamil: சாணக்யநீதி என்பது இந்தியாவின் பண்டைய அரசியல் தத்துவவாதியான சாணக்கியரால் எழுதப்பட்ட புகழ்பெற்ற நூலாகும். சாணக்கியர் நாட்டின் மிக முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார், அவரது செல்வாக்கு 2,500 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. அர்த்த சாஸ்திரத்தின் மூலம் அவரது படைப்புகளில் அவரது சிந்தனைகள் வெளிப்படுகின்றது.
அவரது சாணக்கிய நீதி இது சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது. சாணக்ய நீதி என்பது அரசியல், பொருளாதாரம், தந்திரம், மனித நடத்தை மற்றும் வாழ்க்கை குறித்த ஆழமான அறிவு மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குகிறது. இது இந்தியாவில் மிகவும் மதிப்புமிக்க நூலாக கருதப்படுகிறது.
இந்த நூலில் அற வாழ்க்கை தொடர்பான பல கடினமான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். சாணக்கியர் ஒரு ஸ்லோகத்தில் அறிவாளி எத்தகைய சூழ்நிலையில் துன்பப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். நிதி சாஸ்திரத்தின் இந்த ஸ்லோகத்தையும் அதன் அர்த்தத்தையும் தற்போது பார்க்கலாம். நிதி சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஸ்லோகத்தின் அர்த்தம் என்னவென்றால்,
முட்டாள் சீடனுக்கு உபதேசம் செய்வதாலும், தீய பழக்க வழக்கம் கொண்ட பெண்ணை வளர்ப்பதாலும், செல்வத்தை வீண்டிப்பதன் மூலமும், மகிழ்ச்சி இல்லாத நபருடன் பழகுவதன் மூலமும் புத்திசாலிக்கு கூட துன்பத்தை சந்திக்கும் நிலை ஏற்படும் என கூறுகிறார்.
சாணக்கிய நீதி
முட்டாள் மனிதனுக்கு ஞானம் கொடுப்பதில் எந்த நன்மையும் இல்லை என்று சாணக்கியர் கூறுகிறார். இல்லை எனில் அவ்வாறு ஞானம் கொடுப்பதால் புத்திசாலியான நபர் பாதிப்பை சந்திப்பார் என்பது சாணக்கியரின் கூற்று ஆகும்.
உதாரணமாக, பாயா மற்றும் குரங்கின் கதை உங்களுக்கு நினைவுக்கு வரும். முட்டாள் குரங்குக்கு வீடு கட்டச் சொல்லி பாயா தன் இருப்பிடத்தை இழக்க வேண்டியதாயிற்று.
மேலும் பொல்லாத மற்றும் கொடிய பழக்கவழக்கங்கள் கொண்ட பெண்ணை வளர்ப்பதன் மூலமும் துன்பங்கள் நேரும் என்பது சாணக்கியரின் கூற்று ஆகும்.
நோய்கள் பாதித்த மற்றும் செல்வத்தை இழந்த மகிழ்ச்சி அற்ற மனிதர்களிடம் பழகுவது புத்திசாலித்தனம் கொண்ட நபருக்கு தீங்கு விளைவிக்கும் என சாணக்கியர் கூறுகிறார்.
இதில் நோய் என்பது தொற்று நோய்களைக் குறிக்கின்றன. பலர் தொற்று நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களோடு பழங்குவதால் ஏற்படும் தொற்று பாதிப்பு குறித்து சாணக்கிய விளக்குகிறார். செல்வத்தை இழந்து திவால் ஆனவர்களை நம்புவது கடினம் என்பது சாணக்கியரின் கூற்றாக உள்ளது.
சாணக்கிய கொள்கையின்படி, உங்கள் ரகசியங்களை தன்னுடன் வைத்திருக்க முடியாத ஒரு நண்பரிடம் ஒருபோதும் சொல்ல வேண்டாம். அத்தகைய நண்பர்களை ஒருபோதும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். அத்தகைய நபர் மற்றவர்களின் ரகசியங்களை உங்களிடம் கூறுகிறார் என்றால், நாளை கோபம் அல்லது சர்ச்சை ஏற்பட்டால் உங்கள் ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அத்தகையவர்கள் நேரம் வரும்போது உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பார்கள்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்