Financial Stress : பொருளாதாரம், ஆரோக்கியத்தை எப்படி பாதிக்கிறது? தப்பிக்க என்ன வழி?
Financial Stress : ஆரோக்கியமான வாழ்வுக்கு பொருளாதாரம் மிக அவசியம். நமது தேவையைவிட கூடுதல் செலவு ஏற்படும்போது நாம் அதை சமாளிப்பது எப்படி?

கோப்புப்படம்
பொருளாதார பிரச்னை மிகப்பெரிய பிரச்னைதான், அது பயம், பதற்றம், டென்சன், கவலை மற்றும் பீதி என அனைத்தையும் வாழ்வில் கொண்டு வருகிறது.
பொருளாதார அழுத்தத்தை கொடுப்பது எது?
பொருளாதார பிரச்னைக்கு நம்மிடம் போதிய வருமானம் இருக்காதது காரணமாகிறது. கடன் அதிகம் இருக்கும், செலவுகளும் அதிகம் இருக்கும்போது, பணமோ, சேமிப்போ, எதிர்பாராத செலவுகளோ, பொருளாதார மேலாண்மை செய்ய தெரியாதது இன்சூரன்ஸ் போன்றவற்றை செய்துகொள்ளும் வசதியின்மை ஆகியவற்றால், பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுகிறது. இவற்றால், நாம் பயம், பதற்றத்துடன் வாழ வேண்டிய நிலை ஏற்படுகிறது.