Sani Bagavan: ’இந்த 4 ராசிகள் சனியின் தொல்லையில் இருந்து தப்பிக்க இதுதான் வழி!’
”சனிபகவானால் ஒருவரின் ஜாதகத்தில் பலவிதமான பலன்களை அளிக்க முடியும். ஒருவரின் ஜாதகத்தில் சனிபகவான் நல்ல நிலையில் இருந்தால், அவர்கள் வாழ்க்கையில் சிறந்த வெற்றிகளையும் உயரங்களையும் அடைய வைக்க முடியும். அவர்கள் தங்கள் கர்ம வினைகளை தீர்த்துக்கொண்டு, ஆன்மீக அருளை அடைய முடியும்”
நவக்கிரகங்களில் ஒருவரான சனிபகவான் நீதியின் தெய்வமாக போற்றப்படுகிறார். நாம் செய்யும் கர்ம வினைகளுக்கு ஏற்ப நமக்கு சனிபகவான் பலன்களை அளிக்கிறார். நல்ல கர்ம வினைகளை செய்தவர்களுக்கு நற்பலன்களையும், கெட்ட கர்ம வினைகளை செய்தவர்களுக்கு தண்டனையையும் சனிபகவான் அளிக்கிறார்.
சனிபகவானால் ஒருவரின் ஜாதகத்தில் பலவிதமான பலன்களை அளிக்க முடியும். ஒருவரின் ஜாதகத்தில் சனிபகவான் நல்ல நிலையில் இருந்தால், அவர்கள் வாழ்க்கையில் சிறந்த வெற்றிகளையும் உயரங்களையும் அடைய வைக்க முடியும். அவர்கள் தங்கள் கர்ம வினைகளை தீர்த்துக்கொண்டு, ஆன்மீக அருளை அடைய முடியும்.
ஒருவரின் ஜாதகத்தில் சனி பகவான் கெட்ட நிலையில் இருந்தால், அவர்கள் வாழ்க்கையில் சில சோதனைகளையும், துன்பங்களையும் சந்திக்க நேரிடும். அவர்கள் தங்கள் கர்ம வினைகளை சரிசெய்து, நல்ல கர்ம வினைகளை செய்வதன் மூலம் இந்த சோதனைகளையும், துன்பங்களையும் கடக்க முடியும்.
ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தசாடம சனி ஆகியவைகள் மூலம் 12 ராசிக்காரர்களுக்கமான கர்மவினைகளை சனிபகவான் அளிக்கிறார்.
தற்போது கடகம், விருச்சகம், மகரம், கும்ப ராசிக்காரர்கள் இத்தகைய பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.
இந்த ராசிக்காரர்கள் சனி பகவான் தரும் பாதிப்புகளில் இருந்த தப்பிக்க கீழ்கண்ட வழிமுறைகளை செய்ய ஜோதிடர்கள் அறிவுறுத்துகின்றனர்.
- தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.
- சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழிபடவும்.
- கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம்.
- வன்னி மர இலைகளை மாலைகளாக தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமை தோறும் சாற்றி வணங்கி வழிபடவும்.
- சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக் கூடாது.
- சனிக்கிழமை தோறும் நல்லெண்ணை குளியல் செய்தால் கெடுதல் குறையும்.
- தினமும் விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யவும்.
- அனுமன் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும்.
- ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம்.
- தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம்.
- அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்யலாம்.
- ஏழை மாணவர்களின் கல்வி கட்டணம், படிப்பு செலவுக்கு உதவலாம்.
- சனி பிரதோஷ காலங்களில் வழிபாடு செய்வது சிறந்தது.
- ஏழை எளியோருக்கு அன்னதானத்திற்கு உதவிவும்
- சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம்.
- மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைம்பெண்களுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.
- வன்னிமரத்தை சுற்றி வந்து வணங்க வேண்டும். இதனால் சனிபகவானின் கொடுமையான பாதிப்புகள் விலகி விடும்.
- பிரதோஷ காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இலை கொடுத்து வணங்க வேண்டும்.
டாபிக்ஸ்