தமிழ் செய்திகள்  /  Astrology  /  Came The Zodiac Signs That Should Be Very Cautious Due To Sadashtaka Yoga

Cautious: வந்தது சடாஷ்டக யோகம்: மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய ராசிகள்!

Marimuthu M HT Tamil
Mar 04, 2024 10:05 AM IST

சடாஷ்டக தோஷத்தால் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய ராசிகள் குறித்துக் காண்போம்.

சடாஷ்டக தோஷத்தால் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய ராசிகள்
சடாஷ்டக தோஷத்தால் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய ராசிகள்

ட்ரெண்டிங் செய்திகள்

இதனால் மே 1 ஆம் தேதி வரை சில ராசியினர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்த சடாஷ்டக யோகத்தால் கவனமாக இருக்கவேண்டிய ராசிகள் குறித்துக் காண்போம்.

மேஷம்: சடாஷ்டக யோகத்தால், மேஷ ராசியினர் பல இக்கட்டான சூழ்நிலைகளைக் கடக்க நேரிடும். உடல்நலனில் அக்கறை தேவை. விரயச் செலவுகளைக் குறைக்கவும். கடன் வாங்கும் சூழல் வரும். எதற்கு கடன் வாங்குகிறோம் என்பதை உணர்ந்து வாங்கவும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் கூடும்.

கடகம்: இந்த ராசியினர் வரும் மே மாதம் வரை எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இந்த காலகட்டத்தில் கூடப்பிறந்த சகோதர - சகோதரிகளுக்கு இடையே சண்டை சச்சரவுகள் உண்டாகலாம். திறந்த மனதுடன் பேசினால் உறவுகளுக்கிடையே உள்ள பிரச்னை சரியாகும். தாய் தகப்பனுடன் கருத்துவேறுபாடுகள் உண்டாகலாம். தனியார் துறையில் பணிபுரிபவர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது முக்கியம். நம்பிக்கைத்துரோகிகள், பகைவர்கள் ஆகியோரிடமும் மிகவும் கவனமுடன் இருத்தல் வேண்டும்.

தனுசு: இந்த ராசியினருக்கு சடாஷ்டக யோகத்தால் பணியிடத்தில் நெருக்கடியான, இக்கட்டான சூழலைச் சந்திப்பீர்கள். போட்டித் தேர்வுகளுக்குப் படிப்பவர்களிடம் சுணக்கமான சூழல் உண்டாகும். தொழில்முனைவோர் யாரையும் நம்பி கடன் கொடுக்கக் கூடாது. பிணய பத்திரத்தில் கையொப்பம் போடக் கூடாது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்