Ketu Transit: கேதுவின் விளையாட்டு ஆரம்பம்..! அதிர்ஷ்ட மழை தான் - 2025இல் கோடீஸ்வர யோகம் பெறும் ராசிகள்
Ketu Gochar Horoscope: கேதுவின் சஞ்சாரம் 12 ராசிகளையும் பாதிக்கும். இருப்பினும் அடுத்த 11 மாதத்தில் கேது பெயர்ச்சியால் 2025இல் கோடீஸ்வர யோகம் பெறும் ராசிகள் எவை என்பதை பார்க்கலாம்.
கேதுவின் சஞ்சாரம் 12 ராசிகளையும் பாதிக்கும். கேது எப்போதும் அசுப பலன்களைத் தருவதில்லை. கன்னி ராசியில் அமர்ந்திருக்கும் கேது 2025ஆம் ஆண்டு வரை சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தருவார். கேது பெயர்ச்சியின் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் எவை என்பதை பார்க்கலாம்
கேது பெயர்ச்சி
சிக்கவைக்கும் கிரகமான கேது தற்போது கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். கேது அக்டோபர் 30, 2023 அன்று மதியம் 02:13 மணிக்கு கன்னி ராசியில் பெயர்ச்சியடைந்து, 2025ஆம் ஆண்டு வரை இந்த ராசியில் இருப்பார்.
12 ராசிகளையும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கும் நவக்கிரக பெயர்ச்சிகளில் கேது பெயர்ச்சி முக்கியமானதாகும். ஜோதிடக் கணக்கீடுகளின்படி, கேது சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்களையும், தொழிலில் வெற்றியையும் தருவார்.
கேது கிரகம் ஆன்மீக கிரகமாக கருதப்படுகிறது மற்றும் அதன் விளைவு காரணமாக, இதன் பெயர்ச்சியி்ல இருக்கும் ராசிக்காரர்கள் தங்களைச் சுற்றியுள்ள அனைத்து இன்பங்களிலிருந்தும் விலகி செல்கிறார்கள்.
கேது பெயர்ச்சி பலன்கள்
ஜோதிட சாஸ்திரத்தில், கேது தீங்கு விளைவிக்கும் மற்றும் வாழ்க்கையில் இருந்து அனைத்தையும் பறிக்கும் கிரகமாக கருதப்படுகிறது என்று கூறப்படுகிறது. ஜாதகத்தில் அதன் பலன் காரணமாக, ஒரு நபர் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
ஆனால் கேது கன்னி ராசியில் இருப்பதால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட கொட்டுவதோடு, தொழில் ராக்கெட் போல வேகம் கூடி பல நன்மைகளைத் தரும்.
கேது பெயர்ச்சியின் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள்
மேஷம்
மேஷ ராசிக்காரர்களின் ஆறாம் வீட்டில் கேது அமர்ந்திருப்பதால் இந்த சஞ்சாரத்தின் தாக்கத்தால் தொழில் வளர்ச்சியும், பண பலனும் கிடைக்கும். உங்கள் துறையில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும்.
2025ஆம் ஆண்டுக்குள் உங்கள் தொழிலில் பெரிய அளவில் சாதிக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் அமையும். சம்பள உயர்வுக்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
கடகம்
கடகம் ராசிக்காரர்களின் மூன்றாவது வீட்டில் கேது சஞ்சரிக்கிறார். கேது சஞ்சாரத்தின் தாக்கத்தால், 2025ஆம் ஆண்டுக்குள் தொழிலில் வெற்றி பெறுவீர்கள்.
இந்த சிறப்பான காலகட்டத்தில், உங்கள் தொழிலில் நீங்கள் எடுக்கும் எந்த முயற்சியிலும் வெற்றி பெறுவீர்கள். புதிய வேலை வாய்ப்புகளைப் பெறுவீரகள். இந்த காலகட்டத்தில் நீங்கள் சிறந்த நிலையில் இருப்பீர்கள். பணம் சம்பாதிப்பதற்கான புதிய வழிகள் உருவாகும்
கன்னி
கன்னி ராசிக்காரர்களின் முதல் வீட்டில் கேது அமர்ந்திருக்கிறார். 2024ஆம் ஆண்டின் இறுதியில், நீங்கள் வேலையில் பதவி உயர்வு மற்றும் வருமான அதிகரிப்பு ஆகியவற்றைப் பெறலாம்.
கேது சஞ்சாரத்தால் பணப் பலன்களைப் பெறுவீர்கள். இதனுடன், உங்கள் நிதி நிலையும் மேம்படும்.
விருச்சிகம்
கேது விருச்சிகத்தின் பதினொன்றாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். தொழில் துறையில் சரியான முடிவை எடுப்பீர்கள். பணியிடத்தில் ஒரு தலைமைத்துவ பண்புகள் வெளிப்படும். இந்த சிறப்பான காலகட்டத்தில் உங்கள் தொழிலில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். இந்த காலகட்டத்தில் உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும்.
2025இல் கேது பெயர்ச்சி எப்போது
கேது கன்னி ராசியை விட்டு 2025 மே 18 ஞாயிற்றுக்கிழமை மாலை 04:30 மணிக்கு சிம்ம ராசியில் பிரவேசிக்கிறார்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்