Budhan Peyarchi Palangal: ’செப்டம்பரில் சிம்ம ராசியில் நுழையும் புதன்!’ கோடீஸ்வர யோகம் பெறும் 6 ராசிகள்!-budhan peyarchi palangal how it benefits rishabam kadagam simmam thulam dhanaushu and kumbam - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Budhan Peyarchi Palangal: ’செப்டம்பரில் சிம்ம ராசியில் நுழையும் புதன்!’ கோடீஸ்வர யோகம் பெறும் 6 ராசிகள்!

Budhan Peyarchi Palangal: ’செப்டம்பரில் சிம்ம ராசியில் நுழையும் புதன்!’ கோடீஸ்வர யோகம் பெறும் 6 ராசிகள்!

Kathiravan V HT Tamil
Sep 02, 2024 04:34 PM IST

Budhan Peyarchi Palangal: சூரியனின் ராசியான சிம்மத்தில் புதன் பகவான் வரும் செப்டம்பர் 4ஆம் தேதி அன்று நுழையப் போகிறார். இந்த காலகட்டத்தில் 6 ராசிகளுக்கு மிகுந்த நன்மைகள் கிடைக்கும்.

Budhan Peyarchi Palangal: ’செப்டம்பரில் சிம்ம ராசியில் நுழையும் புதன்!’ கோடீஸ்வர யோகம் பெறும் 6 ராசிகள்!
Budhan Peyarchi Palangal: ’செப்டம்பரில் சிம்ம ராசியில் நுழையும் புதன்!’ கோடீஸ்வர யோகம் பெறும் 6 ராசிகள்!

தற்போது புதன் பகவான் கடக ராசியில் இருந்து சிம்மம் ராசியில் வரும் செப்டம்பர் 4ஆம் தேதி முதல் சஞ்சரிக்க உள்ளார். இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த ராசி மாற்றம் சாதகமாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

புதனின் சிம்மம் சஞ்சாரம் எந்த ராசிக்காரர்களுக்கு உகந்தது?

இந்த பெயர்ச்சி ஆனது ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிக்காரர்களுக்கு புதனின் பெயர்ச்சி நல்ல பலன்களைத் தரும். 

இது காதல் வாழ்க்கை, தொழில், வணிகம் மற்றும் நிதி வாழ்க்கையில் நல்ல பலன்களை ஏற்படுத்தும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் நேர்மறையான முடிவுகளைப் பெறுவதில் மகிழ்ச்சி அடைவீர்கள்.

ரிஷபம் 

ரிஷபம் ராசிக்கு 2 மற்றும் 5ஆம் இடங்களுக்கு அதிபதியான புதன் பகவான் ஆவார். சிம்மம் ராசியில் புதன் சஞ்சரிக்கும் காலம் ரிஷபம் ராசிக்கு நன்மைகளை தருவதாக இருக்கும். பணவரவு, அறிவுத்திறன், கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். எழுதுபொருட்கள் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சிறந்த லாபம் கிடைக்கும். 

கடகம் 

கடகம் ராசிக்கு மூன்று மற்றும் 12ஆம் இடத்திற்கு அதிபதியாக புதன் பகவான் உள்ளார். சிம்ம ராசியில் புதனின் சஞ்சாரத்தால் மனத் தெளிவு உண்டாகும். ஆரோக்கியம் மேம்படும். மகிழ்ச்சி ஏற்படும். விவேகமாக செயல்படும் மனநிலை உண்டாகும். அடுத்த மூன்று வாரங்கள் அற்புத பலன்களை தரும். 

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்களுக்கு 2 மற்றும் 11ஆம் இடங்களுக்கு அதிபதியாக புதன் பகவான் உள்ளார். சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த காலம் மிகவும் நன்மைகள் தரக்கூடியதாக இருக்கும். நீண்டநாட்களாக நிறைவேறாத எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தி ஆகும். மனதில் இருந்து வந்த எண்ணங்கள் அத்தனையும் நிறைவேறும். 

துலாம்

துலாம் ராசிக்கார்களுக்கு விரையாதிபதியாகவும், பாக்கியாதிபதியாகவும் புதன் பகவான் உள்ளார். அற்புதமான பொற்காலத்தை இந்த புதன் பெயர்ச்சி உருவாக்கும். போகம் மற்றும் யோகம் நிறைந்த காலமாக புதனின் சஞ்சார காலம் இருக்கும். இந்த காலகட்டத்தில் பெயர், புகழ் வந்து சேரும். 

தனுசு 

தனுசு ராசிக்கு புதன் பகவான் ஆனவர் 7 மற்றும் 10ஆம் வீட்டின் அதிபதியாக உள்ளார். தொழிலில் முன்னேற்றம், வேலையில் திருப்தி, புதிய பொருட்களை வாங்குதல், பதவி உயர்வு உள்ளிட்ட பலன்கள் உண்டாகும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். பணியிடத்தில் கௌரவம் கூடும். 

கும்பம்

கும்பம் ராசிக்கு சனி பகவான் 7ஆம் இடத்திற்கு வருகிறார். கும்பத்தில் உள்ள சனி பகவான் ஆட்சி பெற்று புதனை பார்ப்பது நன்மைகளை தரும். தாமதம் ஆகி கொண்டு இருந்த வேலைகள் முடியும். எதிர்கால நலனை கருதி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். நினைத்தது நிறைவேறும் காலமாக இது இருக்கும். நண்பர்கள் உங்களுக்கு எதிராக செயல்படலாம் என்பதால் மிகவும் கவனமாக செயல்படுவது அவசியம். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.