’துலாம் முதல் மீனம் வரை!’ அதிர்ஷ்டமும் யோகமும் சேர அணிய வேண்டிய ராசிக்கற்கள் இதோ!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ’துலாம் முதல் மீனம் வரை!’ அதிர்ஷ்டமும் யோகமும் சேர அணிய வேண்டிய ராசிக்கற்கள் இதோ!

’துலாம் முதல் மீனம் வரை!’ அதிர்ஷ்டமும் யோகமும் சேர அணிய வேண்டிய ராசிக்கற்கள் இதோ!

Kathiravan V HT Tamil
Published Oct 11, 2024 05:10 PM IST

நீங்கள் தவறான ரத்தினத்தை அணிந்தால், நீங்கள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும். ரத்தினக் கற்களைப் பற்றி உங்களுக்கு நல்ல அறிவு இல்லையென்றால், தவறான ஒன்றை அணிவதற்குப் பதிலாக அவற்றை அணியாமல் இருப்பது நல்லது.

’துலாம் முதல் மீனம் வரை!’ அதிர்ஷ்டமும் யோகமும் சேர அணிய வேண்டிய ராசிக்கற்கள் இதோ!
’துலாம் முதல் மீனம் வரை!’ அதிர்ஷ்டமும் யோகமும் சேர அணிய வேண்டிய ராசிக்கற்கள் இதோ!

இது போன்ற போட்டோக்கள்

ஆனால் நீங்கள் தவறான ரத்தினத்தை அணிந்தால், நீங்கள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும். ரத்தினக் கற்களைப் பற்றி உங்களுக்கு நல்ல அறிவு இல்லையென்றால், தவறான ஒன்றை அணிவதற்குப் பதிலாக அவற்றை அணியாமல் இருப்பது நல்லது.

துலாம்

துலாம் ராசிக்கு உரிய கிரகம் ஆக சுக்கிர பகவான் உள்ளார். அழகு, காதல், ஆடம்பரம், செல்வத்திற்கு உரிய கிரகம் ஆக சுக்கிர பகவான் உள்ளார். சுக்கிர பகவானுக்கு உரிய கற்களாக வைரம் உள்ளது. வைரம் ஆனது ஈர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் இந்த ராசிக்காரர்களின் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை நீக்குகிறது. வைர மோதிரம் அணிவதன் மூலம் சுக்கிரனின் அருளையும், ஆசியையும் பெற முடியும் என்பது ஜோதிடர்கள் கூற்று ஆகும். வெள்ளிக்கிழமை காலையில் குளித்துவிட்டு வலது கை நடுவிரலில் வைரத்தை அணிவது மங்களம் உண்டாக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு அதிபதியாக செவ்வாய் பகவான் உள்ளார். செவ்வாய் பகவானுக்கு உரிய நிறமாக சிவப்பு உள்ளது. விருச்சிகம் ராசிக்காரர்கள் சிவப்பு நிற பவளத்தை அணியும் அணியும் போது மிகுந்த நன்மைகளை பெற முடியும். இதனால் உடல் மற்றும் மன வலிமை, செல்வம், உறவு, நட்பு ஆகியவை வளரும்.

தனுசு

தனுசு ராசிக்கு அதிபதியாக குரு பகவான் உள்ளார். ஒழுக்கம், பொலிவு, செல்வம் ஆகியவற்றின் காரகத்துவம் கொண்ட கிரகம் ஆக குரு பகவான் உள்ளார். குரு பகவானுக்கு உரிய கல்லாக மஞ்சள் நிற புஷ்பராகம் உள்ளது. இதனை அணியும் போது வாழ்கையில் ஏற்றமும், முன்னேற்றமும் உண்டாகும்.  

மகரம்

மகர ராசிக்கு உரிய கிரகம் ஆக சனி பகவான் உள்ளார். உழைப்பு, நீதி, நேர்மை ஆகியவற்றின் அடையாளமாக சனி பகவான் உள்ளார். சனி பகவானுக்கு உரிய கற்களாக நீலக்கல் உள்ளது. நீலக்கல் அணிந்தால், பணவரவு, ஆரோக்கியம், புகழ், அதிர்ஷ்டம் ஆகியவற்றை கொடுக்கும். 

கும்பம்

கும்பம் ராசியின் அதிபதியாக சனி பகவான் உள்ளார். மகரம் ராசியை போலவே கும்பம் ராசியினரும் நீலக்கல் அணிவதன் மூலம் நிதி சார்ந்த நன்மைகள், ஆரோக்கியம், புகழ், அதிர்ஷ்டத்தை பெற முடியும். 

மீனம்

மீனம் ராசிக்கு அதிபதியாக குரு பகவான் உள்ளார். ஒழுக்கம், பொலிவு, செல்வம் ஆகியவற்றின் காரகத்துவம் கொண்ட கிரகம் ஆக குரு பகவான் உள்ளார். இவர்கள் மஞ்சள் நிற புஷ்பராகம் அணிவதால் மேன்மைகளை அடையலாம்.  

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.