Sani Thisai: ’மேஷம் முதல் மீனம் வரை! 19 ஆண்டு திசை காலத்தில் சனி பகவான் யாரை ஏற்றிவிடுவார்! யாரை கவிழ்த்துவிடுவார்!’-astrological insights how saturns 19 year thisai benefits major lagnas and transforms lives - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani Thisai: ’மேஷம் முதல் மீனம் வரை! 19 ஆண்டு திசை காலத்தில் சனி பகவான் யாரை ஏற்றிவிடுவார்! யாரை கவிழ்த்துவிடுவார்!’

Sani Thisai: ’மேஷம் முதல் மீனம் வரை! 19 ஆண்டு திசை காலத்தில் சனி பகவான் யாரை ஏற்றிவிடுவார்! யாரை கவிழ்த்துவிடுவார்!’

Kathiravan V HT Tamil
Aug 21, 2024 07:00 AM IST

Sani Thisai: 25 வயது தொடங்கி 60 வயது வரையிலான காலகட்டத்தில் சனி மகாதிசை வந்து அது உங்கள் ஜாதகத்திற்கு யோகமான நிலையில் இருந்தால் ஜாதகர் அற்புதமான நன்மைகளை தருவார்.

Sani Thisai: ’மேஷம் முதல் மீனம் வரை! 19 ஆண்டு திசை காலத்தில் சனி பகவான் யாரை ஏற்றிவிடுவார்! யாரை கவிழ்த்துவிடுவார்!’
Sani Thisai: ’மேஷம் முதல் மீனம் வரை! 19 ஆண்டு திசை காலத்தில் சனி பகவான் யாரை ஏற்றிவிடுவார்! யாரை கவிழ்த்துவிடுவார்!’

உதாரணமாக பூசம், அனுசம், உத்தரட்டாதி நட்சத்திரக்கார்களுக்கு முதல் திசையே சனி திசை என்பதால் சனி திசையால் ஏற்படும் நன்மைகளும், தீமைகளும் குறைவாகவே இருக்கும். இந்த மூன்று நட்சத்திரங்களும் கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிகளில் வரும்.

25 வயது தொடங்கி 60 வயது வரையிலான காலகட்டத்தில் சனி மகாதிசை வந்து அது உங்கள் ஜாதகத்திற்கு யோகமான நிலையில் இருந்தால் ஜாதகர் அற்புதமான நன்மைகளை தருவார். 

சனி திசை யாருக்கு யோகம் தரும்?

  • மேஷம் லக்னத்திற்கு ஜீவன ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதி ஆவார். 
  • ரிஷபம் லக்னத்திற்கு பாக்கிய மற்றும் தசம கேந்திர அதிபதியாகவும், தர்ம கர்மாதிபதியாகவும் இருப்பார். 
  • மிதுனம் லக்னத்திற்கு அஷ்டமாதிபதியாகவும், பாக்கியாதிபதியாகவும் இருப்பார். 
  • கடக லக்னத்திற்கு சப்தமாதிபதி மற்றும் அஷ்டமாதிபதியாகவும் இருப்பார். 
  • சிம்மம் லக்னத்திற்கு ருண, ரோணாதிபதியாகவும், சப்தமாதிபதியாகவும் இருப்பார். 
  • கன்னி லக்னத்திற்கு பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியாகவும், ரோகாதிபதியாகவும் இருப்பார். 
  • துலாம் லக்னத்திற்கு முழு ராஜயோகாதிபதியாகவும், பூர்வபுண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியாகவும் இருப்பார். 
  • விருச்சிகம் லக்னத்திற்கு தைரிய, வீரிய அதிபதியாகவும், சுகாதிபதியாகவும் இருப்பர். 
  • தனுசு லக்னத்திற்கு தனாதிபதியாகவும், தைரிய வீரியாதிபதியாகவும் இருப்பார். 
  • மகரம் லக்னத்திற்கு லக்னாதிபதியாகவும், தனாதிபதியாகவும் இருப்பார். 
  • கும்பம் லக்னத்திற்கு லக்னாதிபதியாகவும், விரையாதிபதியாகவும் இருப்பார். 
  • மீனம் லக்னத்திற்கு லாபாதிபதியாகவும், விரையாதிபதியாகவும் இருப்பார்.  

சனி பகவானின் காரகத்துவம் 

கடும் உழைப்பு, அழுக்கு படிதல், பூமிக்கு கீழ் கிடைக்கும் கனிமங்கள், கழிவுப்பொருட்கள், இரும்பு, ரசாயன பொருட்கள் உள்ளிட்டவை சனி பகவானின் காரகத்துவம் பெற்று விளங்குகின்றது. 

மேஷ லக்னத்திற்கு சனி பகவான் பாதி சுபர் என்பதால் கலவையான பலன்களை தருவார். 

ரிஷபம் லக்னத்திற்கு சனி பகவான் முழு சுபர் என்பதால் நன்மைகளை மட்டுமே செய்வார். 

மிதுனம் லக்னத்திற்கு சனி பகவான் பாதி சுபர் ஆவார். இருப்பினும் 75 சதவீத நன்மைகளை தருவார். 

கடகம் லக்னத்திற்கு சனி பகவான் நல்ல பலன்களை தரும் சாத்தியம் இல்லாவிட்டாலும் திருமணம், வாழ்கை துணை, கூட்டாளி, பங்காளி ஆகியவற்றிற்கு சனி ஆதிபதியம் பெற்று உள்ளார். 

சிம்மம் லக்னத்திற்கு நோய், எதிரி, கடன், போக்குவரத்து, வம்பு, வழக்குகளை தருவார். அதே நேரத்தில் திருமண வாழ்கை உள்ளிட்டவற்றை தருபவராகவும் உள்ளார். 

கன்னி லக்னத்திற்கு சனி பகவான் முக்கால் சுபர் ஆக உள்ளார். 

துலாம் லக்னத்திற்கு ராஜயோகாதிபதியாக சனி பகவான் செயல்படுவார். 

விருச்சிகம் லக்னத்திற்கு கலப்பு பலன்களையே சனி பகவான் தருவார். 

தனுசு லக்னத்திற்கு தனாதிபதி, தைரிய வீரிய அதிபதி என்பதால் போதுமான பலன்களை தருவார். 

மகரம் மற்றும் கும்பம் லக்னத்திற்கு சனி பகவான் லக்னாதிபதி என்பதால் அவர் யாருடன் சேருகிறார். எந்த வீட்டில் அமர்கிறார் என்பதை பொறுத்து நற்பலன்கள் மிகுதியாகவும், கெடு பலன்கள் குறைவாகவும் இருக்கும்.  

மீனம் லம்னத்திற்கு லாப மற்றும் விரையாதிபதியாக உள்ள சனி பகவான் கலவையான பலன்களை தருவார். 

ரிஷபம், துலாம் லக்னத்திற்கு முழு பலன்களையும். மிதுனம் மற்றும் லன்னி லக்னங்களுக்கு நன்மை மற்றும் தீமைகளை கலந்தும், மகரம் மற்றும் கும்பத்திற்கு தன் வீடு என்பதால் நன்மையும் தருவார். பிற வீடுகளுக்கு சனி பகவான் சேரும் கிரகங்களை பொறுத்தே தீர்மானிக்கப்படும். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.