Astrological Benefits: ’மேஷம் முதல் மீனம் வரை!’ அதிர்ஷ்ட யோகங்கள் தரும் 9ஆம் இட ரகசியங்கள்!-astrological benefits of 1st 5th and 9th houses luck fame and wealth - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Astrological Benefits: ’மேஷம் முதல் மீனம் வரை!’ அதிர்ஷ்ட யோகங்கள் தரும் 9ஆம் இட ரகசியங்கள்!

Astrological Benefits: ’மேஷம் முதல் மீனம் வரை!’ அதிர்ஷ்ட யோகங்கள் தரும் 9ஆம் இட ரகசியங்கள்!

Kathiravan V HT Tamil
Sep 10, 2024 09:18 PM IST

ஒரு மனிதன் அதிஷ்டசாலியா?, முன்னேறக் கூடியவனா?, வாழ்வில் கிடைக்க வேண்டிய அனைத்து பாக்கியதைகளையும் விவரிக்கும் இடமாக 1, 5, 9ஆம் இடங்கள் உள்ளது. இந்த மூன்று இடங்களும் பாதிக்கப்பட கூடாது.

Astrological Benefits: ’மேஷம் முதல் மீனம் வரை!’ அதிர்ஷ்ட யோகங்கள் தரும் 9ஆம் இட ரகசியங்கள்!
Astrological Benefits: ’மேஷம் முதல் மீனம் வரை!’ அதிர்ஷ்ட யோகங்கள் தரும் 9ஆம் இட ரகசியங்கள்! (Pixabay)

உதாரணமாக தனுசு லக்னத்தை எடுத்துக் கொண்டால் லக்னத்திற்கு உரியவர் ஆன குரு பகவான், 5ஆம் இடத்திற்கு உரிய செவ்வாய், 9ஆம் இடத்திற்கு உரிய சூரியன் ஆகியோர் நட்பு கிரகங்களாக உள்ளனர். 

ஒரு மனிதன் அதிஷ்டசாலியா?, முன்னேறக் கூடியவனா?, வாழ்வில் கிடைக்க வேண்டிய அனைத்து பாக்கியதைகளையும் விவரிக்கும் இடமாக 1, 5, 9ஆம் இடங்கள் உள்ளது. இந்த மூன்று இடங்களும் பாதிக்கப்பட கூடாது. 

லக்னம் 

முதலாவதாக ஒருவருக்கு லக்னம் பாதிக்கவே கூடாது. லக்னாதிபதி பாவ கிரகம் ஆகவே இருந்தாலும் லக்னத்தில் வலுப்பெறுவது சிறப்பு. லக்னத்தில் இயற்கை சுபர்களின் தொடர்பு கிடைப்பது சிறப்பு தரும். ஒருவரது ஜாதகத்தில் லக்னாதிபதி வலுப்பெற்று இருப்பது முதல்நிலை யோகத்தை தரும். இவர்களின் முயற்சி சிறப்பாக இருக்கும். எந்த சூழ்நிலையையும் ஜாதகர் சமாளிப்பார். லக்னத்தில் லக்னாதிபதி வலுப்பெற்றால் 7ஆம் பார்வையாக 7ஆம் இடத்தை பார்ப்பதால் வாழ்கைத் துணை சிறப்பாக இருக்கும், நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள், கூட்டாளிகளால் முன்னேற்றம் ஏற்படும், சமுதாயத் தொடர்புகள் மதிப்புகளை தரும். லக்னம் பழுதுபட்டு இருப்பது, லக்னத்தில் பாவ அல்லது நீச கிரகங்கள் இருந்தால் ஜாதகர் தன்னம்பிக்கை குன்றியவராக இருப்பார். 

ஐந்தாம் இடம் 

குழந்தை பாக்கியம், பூர்வ புண்ணியம், மந்திர உபதேசம், குருமார்கள் அனுக்கிரகத்தை தரும் இடமாக 5ஆம் இடம் உள்ளது. ஒருவருக்கு 5ஆம் இடம் கெடக்கூடாது. அப்படி கெட்டுபோனால் சமூதாயத்தில் கௌரம், புகழ் கெடும். கடவுள் அருள் கிடைக்காது. 5ஆம் இடத்தில் பாவ கிரகங்கள் இருப்பது, 5ஆம் அதிபதி நீசம் பெறுவது, 5ஆம் இடத்தில் நீச கிரகம் அமர்வது மோசமான அமைப்பாக உள்ளது.

ஒன்பதாம் இடம் 

9ஆம் இடம் என்பது பாக்கிய ஸ்தானம் ஆகும். இந்த பிறவி எதற்கு எடுத்து உள்ளீர்கள், உங்கள் பூர்வ புண்ணியம் என்ன?, முன்னோர் வழியாக என்ன கிடைக்க போகிறது, உங்கள் முன்னேற்றம், வெளிநாடு பயணம், யோகங்களை அனுபவிப்பது உள்ளிட்டவற்றை குறிக்கும் இடமாக உள்ளது. 9ஆம் இடத்தில் ஆட்சி பெற்ற கிரகம், 9ஆம் அதிபதி உச்சம் பெற்ற நிலையில் இருப்பது அதிர்ஷ்டத்தின் திறவுகோல் ஆகும். 9ஆம் இடத்தில் நீசம் மற்றும் பாவ கிரகங்கள் இருப்பது, 9ஆம் அதிபதி கெட்டுப்போவது அதிர்ஷடம் இல்லாத நிலையை கொடுக்கும். 9ஆம் அதிபதி வலுப்பெறுவது முயற்சியில் வெற்றி, செல்வம் சேர்ப்பது, உயர்கல்வி பயில்வது உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

 

 

 

 

Whats_app_banner