தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Astro Tips: உங்கள் பிறந்த நாளில் மெழுகுவர்த்தியை அணைத்து கேக் வெட்டலாமா?

Astro Tips: உங்கள் பிறந்த நாளில் மெழுகுவர்த்தியை அணைத்து கேக் வெட்டலாமா?

Pandeeswari Gurusamy HT Tamil
Dec 12, 2023 12:30 PM IST

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் என்பது அவர் அவர் வசதிக்கு ஏற்ப கொண்டாடபடுகிறது. பலர் தங்களது பிறந்த நாளை அல்லது மனைவி, குழந்தைகளின் பிறந்தநாளை நண்பர்கள் உறவினர்களை அழைத்து விமர்சையாக கொண்டாடுகின்றனர். ஆனால் அந்தநாளில் செய்யக்கூடாத சில காரியங்களையும் சிலர் செய்து விடுகின்றனர்

பிறந்த நாளில் மெழுகுவர்த்தியை அணைத்து கேக் வெட்டலாமா?
பிறந்த நாளில் மெழுகுவர்த்தியை அணைத்து கேக் வெட்டலாமா? (unsplash)

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் என்பது அவர் அவர் வசதிக்கு ஏற்ப கொண்டாடபடுகிறது. பலர் தங்களது பிறந்த நாளை அல்லது மனைவி, குழந்தைகளின் பிறந்தநாளை நண்பர்கள் உறவினர்களை அழைத்து விமர்சையாக கொண்டாடுகின்றனர். ஆனால் அந்தநாளில் செய்யக்கூடாத சில காரியங்களையும் சிலர் செய்து விடுகின்றனர். அது குறித்து இங்கு பார்க்கலாம். இது குறித்து ஆத்மஞான மையம் யூடியூப் சேனலில் தேசமங்கையர்கரசி அவர்கள் கூறியிருக்கும் சில விஷங்களை இங்கு பார்க்கலாம்.

எப்போது கொண்டாடுவது

பலருக்கும் பிறந்த நாளை ஆங்கில மாத தேதியின் அடிப்படையில் கணக்கிட்டு கொண்டாடுவதா இல்லை பிறந்த தமிழ் நட்சத்திர அடிப்படையில் கொண்டாடுவதா என்ற குழப்பம் உள்ளது. பொதுவாக நாம் நமது பிறந்த நாளை பிறந்த தமிழ் மாத நட்சத்திரத்தில் தான் கொண்டாட வேண்டும்.

பிறந்த நாளை எப்போது கொண்டாடலாம்

பிறந்த நாளுக்கு உரிய நட்சத்திரம் எந்த நேரத்தில் வருகிறதோ அந்த நேரத்தில் கொண்டாட வேண்டும். அப்படி வாய்ப்பு இல்லாதவர்கள் காலை அல்லது மாலை நேரத்தில் வழிபடலாம்.

பிறந்தநாளில் கேக் வெட்டுவது.

பிறந்த நாளில் கேக் வெட்டுவது என்பது மேலை நாட்டின் கலாச்சாரம். நமது நாட்டின் வழக்கப்படி விளக்கை ஏற்றி தான் பிறந்தநாளை கொண்டாட வேண்டும். விளக்கை அணைத்து கொண்டாட கூடாது. வேண்டுமானல் கேக் மட்டும் வெட்டி கொண்டாடலாம்.

ஆசீர்வாதம்

பிறந்த நாள் அன்று காலையில் குளித்து முடித்து புதிய ஆடைகளை உடுத்தி தாய் தந்தையர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கலாம்.

பிறகு வீட்டில் சமைத்த இனிப்பு உள்ளிட்ட உணவுகளை கடவுளுக்கு படைத்து நெய்வேத்தியம் செய்ய வேண்டும்.

அன்னதானம்

பிறந்தநாள் அன்று அன்னதானம் செய்வதும் மிகவும் சிறப்பானது. வசதி உள்ளவர்கள் பிறந்த நாளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அன்னதானம் செய்யலாம். ஆனால் அது இயலாது என்ற பட்சத்தில் குறைந்தது ஏழ்மையில் உள்ள ஒருவருக்காவது உணவு வழங்கலாம்.

அச்சனை செய்வது

பிறந்த நாளில் நமது பெயரை சொல்லி அர்ச்சனை செய்வது மிகவும் சிறப்பானது. நம்மால் செய்ய இயலா விட்டால் நம் உறவினர்கள் நண்பர்கள் கூட செய்யலாம்.

பிறந்த நாள் அன்று செய்ய கூடாது

பிறந்த நாள் அல்லது பிறந்த கிழமை அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பதை தவிர்க்க வேண்டும். முடி வெட்டுவது, நகம் வெட்டுவதை தவிர்க்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்