Sani Luck: மீன ராசியில் ஏறிய சனி.. பணவேட்டைக்குப் புறப்பட்டுப் போய் ஜெயிக்கப்போகும் 3 ராசிகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani Luck: மீன ராசியில் ஏறிய சனி.. பணவேட்டைக்குப் புறப்பட்டுப் போய் ஜெயிக்கப்போகும் 3 ராசிகள்

Sani Luck: மீன ராசியில் ஏறிய சனி.. பணவேட்டைக்குப் புறப்பட்டுப் போய் ஜெயிக்கப்போகும் 3 ராசிகள்

Marimuthu M HT Tamil
Oct 03, 2024 07:55 PM IST

Sani: மீன ராசியில் ஏறிய சனி மற்றும் பணவேட்டைக்குப் புறப்பட்டுப் போய் ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் குறித்துக் காண்போம்.

Sani: மீன ராசியில் ஏறிய சனி.. பணவேட்டைக்குப் புறப்பட்டுப் போய் ஜெயிக்கப்போகும் 3 ராசிகள்
Sani: மீன ராசியில் ஏறிய சனி.. பணவேட்டைக்குப் புறப்பட்டுப் போய் ஜெயிக்கப்போகும் 3 ராசிகள்

12 கிரகங்களில் சனி பகவான் நியாயவான் ஆவார். மேலும் நீதிமானும் ஆவார். நாம் செய்யும் செயல்களின் மூலம் சனி பகவான், கடுமையானப் பலன்களைத் தரக்கூடியவர்.

அதனால் தான் சனி பகவானின் பெயர்ச்சியின்போது பலரும் பயத்திற்கு உள்ளாகின்றனர். சனி பகவான், ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை பெயர்ச்சி ஆகிறார்.

வரும் 2025ஆம் ஆண்டு, சனி பகவான் மார்ச் 29ஆம் தேதி இரவு 11:01 மணிக்கு மீனத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் சில ராசியினருக்கு நன்மையும் பல ராசியினருக்கு கெடுபலன்களும் கிடைக்கின்றன.

மீன ராசிக்குப் பெயர்ச்சியாகும் சனி பகவானால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள்:

கும்பம்:
மீன ராசிக்குப் பெயர்ச்சியாகும் சனி பகவானால், கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு பயப்படும்படி எதுவும் நடக்காது. சனியின் ஆசீயினால் நன்மைகளே கிடைக்கும். இந்த காலகட்டத்தில் சனி பகவான் கும்பத்தில் நீசமாக இருப்பதால், வரக்கூடிய ஆண்டில் வெகுநாட்களாக உங்களது பணத்தை வைத்துக்கொண்டு தராமல் இழுத்தடித்தவர்கள், தருவார்கள் எனக்கூறப்படுகிறது.

வெகுநாட்களாகப் பணியில் இருப்பவர்களுக்கு கிடைக்காமல் இருந்த பண ஆதாயம் கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு இருந்த போட்டியாளர்களின் குடைச்சல் நீங்கும். மேலும் தொழிலில் இருந்த மந்தத்தன்மை குறையும். உங்களைப் பற்றி சமூகத்தில் இருந்து வந்த அவப்பெயர் நீங்கும்.

துலாம்:

மீன ராசிக்கு 2025ஆம் ஆண்டில் பெயர்ச்சியாகும் சனி பகவானால், துலாம் ராசியினருக்கு வம்பு மற்றும் வழக்குகளில் இருந்து சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

கடை வைத்திருக்கும் நபர்களுக்கும்; வணிகம் செய்யும் நபர்களுக்கும் இந்த ஆண்டு காலம் லாபகரமாக இருக்கும். வெகுநாட்களாக குழந்தைகள் இன்றி தவித்து வந்த துலாம் ராசியினருக்கு இந்தக் காலத்தில் குழந்தைப்பேறு உண்டாகும். காதலித்து வரும் துலாம் ராசியினருக்கு இந்த காலத்தில் பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் கிடைக்கும்.

மிதுனம்:

மீன ராசிக்கு 2025ஆம் ஆண்டில் பெயர்ச்சியாகும் சனி பகவானால், மிதுன ராசியினருக்கு சிறப்பான நற்பலன்கள் கிடைக்கும். புதிய வேலை தேடும் மிதுன ராசியினருக்கு இந்த காலத்தில் நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

தொழில் வாழ்வில் உங்களுக்கு இருந்த பிரச்னைகள் நீங்கும். தேவையற்ற பேச்சு மற்றும் கோபத்தால் பல எதிரிகளை உருவாக்கி வைத்திருக்கும் மிதுன ராசியினருக்கு நற்பெயரைச் சம்பாதித்து எதிரிகளையும் நண்பர்களாக மாற்றும் தருணம் இது. நீங்கள் செய்யும் தொழிலில் நியாயமான பணவரவினைப் பெற்று, சேமிப்புக்கணக்கில் சேமிப்பீர்கள்.

பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும். ஆன்மிகம் தொடர்பான பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்து இருங்கள்!

Whats_app_banner

டாபிக்ஸ்