2025 புத்தாண்டில் அற்புதம் செய்யப்போகும் ஐந்து கிரகங்கள்.. மேஷம், ரிஷபம், சிம்மம் ராசியினரே ரெடியா இருங்க..!
2025 ஆம் ஆண்டின் முதல் மாதத்தில் முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெற உள்ளது. இதன் காரணமாக மேஷம், ரிஷபம், சிம்மம் ஆகிய 3 ராசிக்காரர்கள் நல்லபலன்களை அடையப் போகிறார்கள். இந்த பெயர்ச்சியால் அவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

கிரகங்களின் நிலை மற்றும் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஒரு நபரின் ஜாதகத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகின்றது. கிரகங்கள் ராசியை மாற்றும் போதெல்லாம், அவற்றின் சாதகமான மற்றும் எதிர்மறையான பலன்கள் 12 ராசிகளிலும் காணப்படுகின்றன. இதற்கிடையில், 2024 ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. புத்தாண்டுக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த வருடத்தில் தாங்கள் சந்தித்த பிரச்னைகள் அனைத்தும் இப்போதே முடிவுக்கு வர வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். புத்தாண்டின் முதல் மாதமான ஜனவரியில் சில முக்கிய கிரகங்கள் ராசிகளை மாற்றுகின்றன. ஜனவரியில் புதன், சுக்கிரன், செவ்வாய், சனி, சூரியன் ஆகியோர் தங்கள் ராசியை மாற்றுகிறார்கள்.
இது போன்ற போட்டோக்கள்
Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!
Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
Jun 30, 2025 09:29 AMஇந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும் - வீடு வாங்குவீங்க, தொழிலில் வெற்றி பெறுவீங்க!
Jun 27, 2025 10:06 AMநாளை முதல் இந்த மூன்று ராசிகளும் சக்கரத்தை சுழற்றும்.. மாறப்போகும் அதிர்ஷ்டம்.. நவ பஞ்சமி யோகத்தின் சுப பலன்கள் இதோ!
Jun 25, 2025 09:43 AM3 ராசிக்காரர்களின் நல்ல நேரம் ஜூன் 30 முதல் தொடங்கும், திடீர் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்பு
Jun 23, 2025 06:15 PMஉங்கள் மூக்கின் வடிவத்தை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? சாமுத்திரிகா சாஸ்திரம் கூறும் விஷயங்கள்
முதலாவதாக, கிரகங்களின் அதிபதியான புதன் ஜனவரி 4, 2025 அன்று தனுசு ராசிக்கு செல்கிறார். சுக்கிரன் ஜனவரி மாதம் மீன ராசியில் நுழைகிறார் . இந்த கிரகங்களில், சனியைப் பற்றி குறிப்பாக குறிப்பிட வேண்டும். ஏனென்றால் இரண்டரை வருடங்களுக்குப் பிறகு சனி கும்ப ராசியிலிருந்து மீன ராசியில் பிரவேசிக்கப் போகிறார்.
கிரகங்களின் அரசனாகக் கருதப்படும் சூரியன் ஜனவரி மாதம் மகர ராசிக்குள் நுழைகிறார். இது மகர சங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது. சனிக்குப் பிறகு செவ்வாய் கடக ராசிக்கு செல்கிறார். இந்த மாற்றம் பல ராசிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும் சில ராசிகளுக்கு நன்மைகளை அள்ளித்தரும் என்று ஜோதிட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.