தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Hayagriva Worship: மயக்கமா.. கலக்கலா.. வாழ்விலே குழப்பமா.. லட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு போதும் மக்களே..

Hayagriva Worship: மயக்கமா.. கலக்கலா.. வாழ்விலே குழப்பமா.. லட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு போதும் மக்களே..

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 20, 2023 12:45 PM IST

ஹயக்ரீவர் சுவாமியை எப்படி வழிபட வேண்டும் என்ற வழிபாட்டு முறைகளை இங்கு பார்க்கலாம்.

ஹயக்ரீவர்
ஹயக்ரீவர்

கல்வியில் சிறக்க ஹயக்ரீவர் வழிபாட்டை தொடருங்கள் ஹயக்ரீவர் சுவாமியை எப்படி வழிபட வேண்டும் என்ற வழிபாட்டு முறைகளை இங்கு பார்க்கலாம்.

ஹயக்ரீவர் தெய்வத்தின் சிறப்புகள்

நாம் நினைத்ததை நினைத்த வண்ணம் நிறைவேற்ற உதவும் தெய்வம் ஹயக்ரீவர்.

மாணவர்களின் கல்வியில் சிறக்க ஹயக்ரீவர் தெய்வத்தை வழிபடுவது நல்லது.

நம் ஞானத்தை அதிகரிக்க உதவுபவர் ஹயக்ரீவர். முடிவெடுப்பதில் குழப்பமான சூழல் இருந்தால் தெளிந்த முடிவை எடுக்க அருள் தருபவர் ஹயக்ரீவர்.

நாராயணின் ஒரு ரூபமாக ஹயக்ரீவர் காட்சி தருகிறார்.

மது ஹைடவர் என்ற இரண்டு அசுரர்களும் இந்த உலகை தான் ஆட்சி செய்ய வேண்டும் என்று எண்ணினர். வேதங்களின் அடிப்படையில் படைக்கும் தொழிலை செய்த பிரம்மனை குறி வைத்தனர். பிரம்மனிடம் இருந்து வேதங்களை பறித்து சென்று விட்டனர்.

அவர்களிடம் இருந்து வேதங்களை கைப்பற்றி மீண்டும் தனக்கு படைப்பு தொழிலைபெற்றுத்தர வேண்டும் என்ற பிரம்மனின் வேண்டுகோள் ஹயக்ரீவர் இடத்தில் சென்றது. அதனால் அந்த அசுரர்களின் குதிரை முகத்தை உடைய ஹயக்ரீவர் கடலுக்கு அடியில் போய் அவர்களை துவம்சம் செய்து வேதங்களை எடுத்து வந்து மீண்டும் பிரம்மனிடம் தருகிறார்.

அதில் ஏற்பட்ட சந்தேகங்களுக்கும் விளக்கம் தரும் இடத்தில் இருந்தார். மேலும் சரஸ்வதி தெய்வத்திற்கு அடிக்கடி ஏற்படும் சந்தேகங்களை தீர்க்கும் தெய்வமாகவும் ஹயக்ரீவர் காட்சி தருகிறார்.

அதேசமயம் ஹயக்ரீவரின் கோபத்தை குறைக்க லட்சுமி ஹயக்ரீவர் மடியில் அமர்ந்துள்ளார். லட்சுமி செல்வத்தை கொடுக்கும் தெய்வம் இதனால் லட்சுமி ஹயக்ரீவரை வழிபடுவதால் கல்வியும் செல்வமும் பெருகும் என்ற நம்பிக்கை உள்ளது.

வழிபாட்டு முறைகள்

ஹயக்ரீவர் படம் வீட்டில் இருந்தால் ஏலக்காய் மாலை போடுவது மிகுந்த சிறப்பு தரும். வீட்டில் ஹயக்ரீவர் படம் இல்லை பெருமாள் படம்தான் உள்ளது என்றால் அதற்கு ஏலக்காய் மாலை போட்டு வழிபடலாம். பசும் பால் காய்ச்சி அதில் ஏலக்காய் தூவி கடவுளுக்கு நெய்வேத்தியம் செய்து அதை பிரசாதமாக குழந்தைகள் குடிக்க குடுக்கலாம்.

துளசி வைத்து ஹயக்ரீவரை வழிபடுவது சிறப்பு. ஹயக்ரீவர் மந்திரங்களை சொல்லி வழிபடுவது விஷேசம். இந்த முறைகளை பின்பற்றி ஹயக்ரீவர் வழிபாடு செய்து வாழ்வில் பலன் பெருங்கள்

(பொறுப்புத்துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான அடிப்படையில் உள்ளன. தெளிவாக தெரிந்து கொள்ள சரியான நிபுணரை அணுகி அறிந்து கொள்ளவும்.)

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்