Amala Raja Yogam : அமல ராஜயோகத்தில் அரசு வேலை, தேர்வில் வெற்றி! அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் எவை?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Amala Raja Yogam : அமல ராஜயோகத்தில் அரசு வேலை, தேர்வில் வெற்றி! அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் எவை?

Amala Raja Yogam : அமல ராஜயோகத்தில் அரசு வேலை, தேர்வில் வெற்றி! அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் எவை?

Priyadarshini R HT Tamil
Sep 06, 2023 02:00 PM IST

Amala Raja Yogam : வேத ஜோதிடத்தின்படி, செப்டம்பர் 4ம் தேதி மாலை மேஷ ராசியில் குரு வக்ரமானத்தின் விளைவாக அமலம் எனப்படும் மங்களகரமான ராஜயோகம் உருவானது. ஜோதிட ரீதியாக வியாழன் 10வது வீட்டில் இருந்தால் அமல ராஜயோகம் உண்டாகும்.

அமல ராஜயோகத்தால் பலன் பெறப்போகும் ராசிகள்
அமல ராஜயோகத்தால் பலன் பெறப்போகும் ராசிகள்

வேத ஜோதிடத்தின்படி, செப்டம்பர் 4ம் தேதி மாலை மேஷ ராசியில் குரு வக்ரமானத்தின் விளைவாக அமலம் எனப்படும் மங்களகரமான ராஜயோகம் உருவானது. ஜோதிட ரீதியாக வியாழன் 10வது வீட்டில் இருந்தால் அமல ராஜயோகம் உண்டாகும்.

மிதுனம் - மிதுன ராசியில் அமல ராஜயோகத்தின் தாக்கம் இந்த காலகட்டத்தில் மிதுன ராசிக்காரர்களின் தொழிலை மேம்படுத்தும். தேர்வுக்கு தயாராக இருப்பவர்கள் வெற்றி பெறுவார்கள். பொருளாதாரம் முன்னெப்போதையும் விட வலுவாகும். குடும்பத்தில் எல்லா விஷயங்களிலும் மகிழ்ச்சி இருக்கும். தடைப்பட்ட எந்த வேலையும் இப்போது முடிக்கப்படும். வியாபாரத்தில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும்.

சிம்மம் - அரசு வேலைக்கு தயாராகும் சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த வேலையில் வெற்றி பெறுவீர்கள். சமூகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். இந்த நேரத்தில் நீங்கள் சிறந்த அனுபவத்தைப் பெறலாம். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுங்கள்.

மீனம் - பணத்தை முதலீடு செய்வதில் வெற்றி பெறுவீர்கள். பொருளாதாரம் முன்னெப்போதையும் விட வலுவாக இருக்கும். வியாபாரத்தில் சவால்களை சந்திக்க நேரிடும். ஆனால் ஜாதகர்கள் அந்த சவாலை எளிதில் சமாளிக்க முடியும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்