Dates For Luck : ஜாக்பாட்.. அதிர்ஷ்டம்.. பணவரவு.. தொழில் யோகம்.. மீன ராசிக்கு இந்த நாட்கள் எல்லாம் சிறப்பாக இருக்கு!-all these days are good for pisces here are the details - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Dates For Luck : ஜாக்பாட்.. அதிர்ஷ்டம்.. பணவரவு.. தொழில் யோகம்.. மீன ராசிக்கு இந்த நாட்கள் எல்லாம் சிறப்பாக இருக்கு!

Dates For Luck : ஜாக்பாட்.. அதிர்ஷ்டம்.. பணவரவு.. தொழில் யோகம்.. மீன ராசிக்கு இந்த நாட்கள் எல்லாம் சிறப்பாக இருக்கு!

Divya Sekar HT Tamil
Mar 26, 2024 10:33 AM IST

Dates For Luck : இந்த மாதம் மீன ராசிக்காரர்களுக்கு எந்த நாள் பணவரவு அதிகரிக்கும், பண தேவையை பூர்த்தி செய்யும் நாள் எந்த நாள், ஜாக்பாட் அடிக்க போகும் தேதிகள் குறித்து இதில் பார்க்கலாம்

 மீன ராசி
மீன ராசி

மீன ராசி தொழில் தொடங்க உகந்த நாட்கள்

ஏப்ரல் மூன்றாம் தேதி மீன ராசிக்கு சாதகமான நாளாக உள்ளது அதேபோல ஏப்ரல் நான்காம் தேதியும் மீன ராசிக்கு சாதகமான நாள் தான்.

ஏப்ரல் ஐந்தாம் தேதி நீங்கள் ஒரு காரியத்தை செய்தால் அது நிச்சயம் நன்றாக முடியும்.

ஏப்ரல் ஏழாம் தேதி உங்களுக்கு சாதகமான நாள் தான் எனவே அன்றைய நாளில் நீங்கள் ஒரு முடிவை எடுப்பது சரியாக இருக்கும்.

அதேபோல ஏப்ரல் ஒன்பதாம் தேதி மீன ராசிக்கு சாதகமாக உள்ளது. நீங்கள் ஏதாவது முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த நாளில் செய்தால் அது நன்மையை அளிக்கும். எனவே இந்த நாளில் நீங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கும் விஷயங்களை செய்யலாம்.

ஏப்ரல் ஒன்பதாம் தேதி அடுத்து உங்களுக்கு சாதகமாக இருக்கக்கூடிய நாள் ஏப்ரல் 15 ஆம் தேதி, இன்றைய நாளும் மீன ராசிகளுக்கு சாதகமான நாளாக உள்ளது இந்த நாளில் நீங்கள் ஏதாவது ஒரு விஷயத்தை செய்யலாம்.

மீன ராசிக்கு ஏப்ரல் 17ஆம் தேதியும் சாதகமான நாளாக தான் உள்ளது இந்த நாளிலும் நீங்கள் உங்கள் வேலையை தொடங்கலாம்.

அதேபோல ஏப்ரல் 25ஆம் தேதி மீன ராசிகளுக்கு மிகவும் நல்ல நாளாக உள்ளது எனவே இந்த நாளிலும் நீங்கள் வேலையை தேடலாம் அல்லது ஒரு தொழிலை தொடங்கலாம் அல்லது நீங்கள் செய்து கொண்டிருக்கும் காரியம் வெற்றிகரமாக முடியலாம்.

அதேபோல ஏப்ரல் 30ஆம் தேதியும் உங்களுக்கு சாதகமான நாளாக தான் உள்ளது.

மீன ராசி பணவரவுக்கு உகந்த நாட்கள்

அதேபோல இந்த மாதம் மீன ராசிக்காரர்களுக்கு எந்த நாள் பணவரவு அதிகரிக்கும், பண தேவையை பூர்த்தி செய்யும் நாள் எந்த நாள் ஜாக்பாட் அடிக்க போகும் தேதிகள் குறித்து இதில் பார்க்கலாம்.

ஏப்ரல் இரண்டாம் தேதி நீங்கள் பொருளாதார வரவு எதிர்பார்க்கலாம். இந்த நாள் அதிர்ஷ்டம் கைகூடும் நாளாக உங்களுக்கு இருக்கும்.

ஏப்ரல் ஏழாம் தேதி உங்களுக்கு அதிர்ஷ்டமான நாள் தான். இந்த நாளில் உங்களுக்கு பணம் வரவும் இருக்கும்.. அதே சமயத்தில் உங்களுக்கு செலவும் இருக்கும்.

மீன ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் பத்தாம் தேதி பணவரவு நன்றாக இருக்கும் அன்றைய நாள் சிறப்பான நாளாக அமையும்.

அதைப்போல மீன ராசிகளுக்கு ஏப்ரல் 11ஆம் தேதியும் நன்றாக இருக்கிறது பொருளாதார ரீதியாக அன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதேபோல ஏப்ரல் 15 ஆம் தேதி ஏப்ரல் 19ஆம் தேதி பொருளாதார ரீதியாக மீன ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கிறது இன்றைய நாள் உங்களுக்கு பண வரவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

அதேபோல ஏப்ரல் 25ஆம் தேதியும் உங்களுக்கு பொருளாதார ரீதியாக நல்ல நாளாக உள்ளது இதற்கு முன்பாக ஏப்ரல் 23ஆம் தேதி உங்களுக்கு பொருளாதார ரீதியாக நல்ல பண வரவு இருந்தாலும் அன்று செலவும் இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் இந்த நாளில் நீங்கள் நல்ல பண வரவு இருக்க வாய்ப்புள்ளது. எனவே இந்த நாளையும் நீங்கள் எதிர்பார்க்கலாம்.

அதேபோல 29ஆம் தேதி பொருளாதார ரீதியாக மீன ராசிக்கு உகந்த நாளாக உள்ளது. மேற்கண்ட நாட்கள் தான் பண வரவும் பொருளாதார ரீதியாக நல்ல ஒரு இடத்தை பிடிக்கக்கூடிய நாளாக இந்த நாட்கள் உள்ளது. இதனை நீங்கள் மனதில் கொண்டு செயல்பட்டால் நல்லது.

மீன ராசி மாணவர்களுக்கு உகந்த நாட்கள்

அதேபோல மாணவர்களுக்கு அதாவது மீன ராசி மாணவர்களுக்கு அடுத்து எங்கு விண்ணப்பிக்கலாம் என்ன செய்யலாம்? எப்போது செய்யலாம் இன்று குழப்பமான மனநிலை இருக்கும் அந்த மீன ராசி மாணவர்கள் எந்த நாட்களில் அப்ளை செய்தால் நன்றாக இருக்கும் எப்போது முடிவெடுத்தால் சரியாக இருக்கும் அந்த நாட்கள் எந்த நாட்கள் என்பது குறித்து பார்க்கலாம்.

நான்காம் தேதி ஏப்ரல் மாதம் மீன ராசி நேயர்களுக்கு சாதகமாக உள்ளது மீன ராசி மாணவர்கள் இந்த நாளில் ஒரு தேர்விற்கு அப்ளை செய்வதாகும் அல்லது வேலைக்கு அப்ளை செய்வதாகும் இந்த நாளில் செய்தால் நன்றாக இருக்கும் இன்றைய நாள் உங்களுக்கு உகந்த நாளாக உள்ளது.

அதைப்போல ஏப்ரல் ஒன்பதாம் தேதி மீன ராசி மாணவர்கள் நல்ல முடிவுகளை எடுக்கலாம் இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாளாக உள்ளது.

ஏப்ரல் 12 ஆம் தேதி மீன ராசி மாணவர்களுக்கு சாதகமாக உள்ளது அதேபோல ஏப்ரல் 15ஆம் தேதியும் சாதகமாக உள்ளது.

ஏப்ரல் 17ஆம் தேதி மீன ராசி மாணவர்களுக்கு நல்ல நாளாக உள்ளதால் இன்றைய நாளில் நீங்கள் ஏதாவது ஒரு முடிவை எடுக்கலாம். ஏப்ரல் 22 மற்றும் 25 இந்த இரண்டு செய்திகளும் மீனராசி மாணவர்களுக்கு உகந்த நாளாக தான் உள்ளது.

நன்றி : life horoscope

டாபிக்ஸ்