தமிழ் செய்திகள்  /  Astrology  /  4400 Crore Budget Presentation In Tirupati Temple

Tirupati Temple: திருப்பதி கோயிலில் 4,400 கோடி பட்ஜெட் தாக்கல்!

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 22, 2023 11:42 AM IST

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் வருடாந்திர பட்ஜெட் குறித்த முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயில்
திருப்பதி ஏழுமலையான் கோயில்

ட்ரெண்டிங் செய்திகள்

திருப்பதி தேவஸ்தானம் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டிற்கான 4,400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வரவு செலவு திட்டத்தைத் தயாரித்திருந்தது. ஏற்கனவே கடந்த மாதம் இந்த ஆண்டு வரவு செலவு திட்டத்திற்கு ஆட்சி மன்ற குழு ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால் தேர்தல் விதிமுறைகள் அமலில் இருந்த காரணத்தினால் இது குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை.

தெலுங்கு புத்தாண்டு தினமான யுகாதியை முன்னிட்டு திருமலை அன்னமா பவனில் வருடாந்திர பட்ஜெட் குறித்த முழு விவரம் இன்று வெளியிடப்பட்டது. இது குறித்து தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர்," திருப்பதி தேவஸ்தான ஆட்சி மன்ற குழு 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர பட்ஜெட்டை பக்தர்களின் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க சுமார் 4,400 கோடி ரூபாயில் தயாரித்துள்ளது.

இதன் மூலம் உண்டியல் காணிக்கை மூலம் 1,591 கோடி ரூபாயும், வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணத்தின் மூலம் 1,000 கோடி வட்டி பணமும், பிரசாத விற்பனையின் மூலம் 500 கோடி ரூபாய் வருவாயும் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் கடைகள் அறைகள் மற்றும் விடுதி வசதிகளின் மூலம் கிடைக்கும் வாடகையில் ரூபாய் 100 கோடி ரூபாயும் கிடைக்கும். இதனை வைத்து பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் 3,200 கோடி மதிப்பீட்டில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டது.

இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணத்தினால் உண்டியல் காணிக்கையின் வருமானம் கடுமையாகக் குறைந்துள்ளது. அதற்கு ஏற்றவாறு வருடாந்திர பட்ஜெட் மதிப்பீடுகளும் குறைக்கப்பட்டுள்ளன.

2021- 22 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கலில் 2937.82 கோடி மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் 3000 கோடி ரூபாய் மட்டுமே வருவாயாகக் கிடைத்திருந்தது. ஒவ்வொரு ஆண்டும் உண்டியல் காணிக்கை வருமானம் பெரிய அளவில் அதிகரித்து வருகிறது மற்றும் பட்ஜெட் திட்டங்களும் அதற்கு ஏற்றவாறு அதிகமாக உள்ளன" எனத் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டியும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்