தமிழ் செய்திகள்  /  Astrology  /  3 Zodiac Signs Or Rasis That Get Success Or Luck With The Combination Of Three Planets

3 Luck Rasis: மூன்று கிரகத்தின் சேர்க்கை.. முத்தான வெற்றியைப் பெறும் 3 ராசிகள்!

Marimuthu M HT Tamil
Feb 05, 2024 06:10 PM IST

- விரைவில் உருவாகும் திரிகிரஹியோகத்தால் நன்மைபெறும் ராசிகள் குறித்துப் பார்க்கலாம்.

திரிகிரஹி யோகம்
திரிகிரஹி யோகம்

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த வகையில் மூன்று ராசிகளின் கூட்டுச் சேர்க்கையால் மார்ச் மாதம், திரி கிரஹி யோகம் உண்டாகிறது. குறிப்பாக சூரியன், புதன், சுக்கிரன் சேர்ந்து திரிகிரஹி யோகத்தை உண்டாக்கவுள்ளன. இந்த யோகத்தால் சில ராசியினர் நன்மைபெறுகின்றனர்.

ரிஷபம்: சூரியன், புதன், சுக்கிரனின் சேர்க்கையால் உண்டாகும் திரிகிரஹியோகம், ரிஷப ராசியினருக்கு லாபம் தரும் வகையில் உள்ளது. இக்காலகட்டத்தில் ரிஷபராசிக்காரர்கள் செய்யும் முதலீட்டுக்கு நல்ல நிகர லாபம் கிடைக்கும். வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் வியாபாரம் செய்யும் ரிஷப ராசியினருக்கு நன்மை கிடைக்கும். பணியிடத்தில் ஆதரவு பெருகும். பங்குச்சந்தையில் முதலீடு செய்திருந்தால் ஏற்றம் உண்டாகும்.

மிதுனம்: இந்த திரிகிரஹி யோகத்தால் மிதுன ராசியினருக்குச் சுப பலன்கள் கிடைக்கப்போகின்றது. தொழில் முனைவோருக்கு நீங்கள் நினைத்துப் பார்க்கமுடியாத வளர்ச்சியைப் பெறும் காலகட்டம் இது. பணிபுரிபவர்களுக்கு சாதகமான ஊதியம் கிடைக்கும். வங்கிக் கணக்கில் சேமிப்பு அதிகரிக்கும். வெகுநாட்களாக தந்தையுடன் இருந்துவந்த பிணக்குகள் மறையும். வேலையில்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.

கும்பம்: இந்த ராசியினருக்கு திரிகிரஹி யோகத்தால் இத்தனை நாட்களாக இருந்த பிரச்னைகள் நீங்கும். வெகுநாட்களாக மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழும் நபர்கள் செல்வந்தர்களாகப் போகிறீர்கள். இத்தனை நாட்களாக உங்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு திருப்பிக் கொடுக்காத நபர்கள், மனம்மாறி பணத்தை உங்கள் வசம் ஒப்படைப்பார்கள். தொழில் முனைவோர் நல்ல வளர்ச்சியைப் பெறுவர். வீட்டில் பொருளாதாரத்தரம் மேம்படும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்