Sun Transit: சிம்மத்தில் ஏறும் சூரிய பகவான்.. நிதி நிலையில் ராஜாவாகி தேன் அடையை ருசிக்கப்போகும் 3 ராசிகள்
Sun Transit: ஆகஸ்ட் மாதத்தில் ஒரு வருடம் கழித்து, சூரியன் தனது சொந்த ராசியான சிம்மத்தில் சஞ்சரிக்கப்போகிறார். சிம்மத்தில் ஏறும் சூரிய பகவானால், நிதி நிலையில் ராஜாவாகி தேன் அடையை ருசிக்கப்போகும் 3 ராசிகள் குறித்துக் காண்போம்.

Sun Transit: ஜோதிடத்தில், சூரிய பகவான் கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறார். சூரிய பகவான் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றி, சஞ்சரிக்கிறார்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 16, 2025 02:00 PMஉங்கள் கனவில் இந்த பூவை கண்டால்.. வாழ்வில் அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு பெறலாம்! கனவு சாஸ்திரம் சொல்லும் விஷயம்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
Jun 15, 2025 08:37 AMலட்சுமி தேவி மிகவும் பிடித்த 3 ராசிகள் இதோ.. செல்வம், கௌரவம், புகழ் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும் பாருங்க!
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்:
அதன்படி, சூரிய பகவான், 12 ராசிகளில் சஞ்சரித்து மீண்டும் ஒரு ராசிக்கு வர ஒரு வருடம் ஆகும். இந்த நேரத்தில், சூரிய பகவான், கடக ராசியில் சஞ்சரித்து வருகிறார். இந்நிலையில் சுமார் 365 நாட்களுக்குப் பிறகு, சூரிய பகவான், தனது சொந்த ராசியின் அடையாளமான சிம்ம ராசியில் சஞ்சரிக்க இருக்கிறார்.
வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி சூரிய பகவான், சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த ராசியில் செப்டம்பர் 16ஆம் தேதி வரை சூரிய பகவான் இதே ராசியில் சஞ்சரிப்பார். ஒரு ஆண்டு கழித்து சிம்ம ராசியில் சூரிய பகவான் வருவதால், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சாதகமான பலன்கள் கிடைக்கும். சிம்ம ராசியில் சூரியனின் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.