Navratri: உருவான பத்ர ராஜயோகம் மற்றும் மாளவ்ய ராஜயோகம்.. நவராத்திரியில் பண செளபாக்கியத்தைப் பெறும் 3 ராசிகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Navratri: உருவான பத்ர ராஜயோகம் மற்றும் மாளவ்ய ராஜயோகம்.. நவராத்திரியில் பண செளபாக்கியத்தைப் பெறும் 3 ராசிகள்

Navratri: உருவான பத்ர ராஜயோகம் மற்றும் மாளவ்ய ராஜயோகம்.. நவராத்திரியில் பண செளபாக்கியத்தைப் பெறும் 3 ராசிகள்

Marimuthu M HT Tamil
Oct 03, 2024 04:55 PM IST

Navratri - உருவான பத்ர ராஜயோகம் மற்றும் மாளவ்ய ராஜயோகம்.. நவராத்திரியில் பண செளபாக்கியத்தைப் பெறும் 3 ராசிகள்

Navratri - உருவான பத்ர ராஜயோகம் மற்றும் மாளவ்ய ராஜயோகம்.. நவராத்திரியில் பண செளபாக்கியத்தைப் பெறும் 3 ராசிகள்
Navratri - உருவான பத்ர ராஜயோகம் மற்றும் மாளவ்ய ராஜயோகம்.. நவராத்திரியில் பண செளபாக்கியத்தைப் பெறும் 3 ராசிகள்

ஜோதிடத்தின்படி, புதன் பகவான் கன்னி ராசியில் சஞ்சரித்து பத்ர ராஜயோகத்தை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும், அசுர குருவான சுக்கிர பகவான், துலாம் ராசியில் பெயர்ச்சியாகி மாளவ்ய ராஜயோகத்தை உண்டாக்கியிருக்கிறார். இந்த இரண்டு ராஜயோகங்களும் நவராத்திரியிலும் தொடர்வதால் அதிர்ஷ்டம்பெறப்போகும் இரண்டு ராசிகள் குறித்துப் பார்ப்போம்.

நாட்காட்டியின்படி, நவராத்திரி இன்றைய தேதியில்(அக்.03) தொடங்குவதால், உருவான இரண்டு ராஜயோகங்களால் அதிர்ஷ்டத்தைப் பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.

இரண்டு ராஜயோகங்களால் அதிர்ஷ்டத்தைப் பெறப்போகும் ராசிகள்:

கன்னி:

கன்னி ராசியினருக்கு புதிதாக உருவாகியிருக்கும் பத்ர மற்றும் மாளவ்ய ராஜயோகத்தால் பயம் மறைந்து, விவேகமும் தன்னம்பிக்கை ஏற்படும். நீங்கள் உங்கள் இலக்குகளில் மிகச்சரியாக பயணித்து எல்லைக்கோட்டைக் கடப்பீர்கள். பொருளாதாரத்தில் வளர்ச்சியைச் சந்திப்பீர்கள். வாங்கிய கடன்களையும் கன்னி ராசியினர் அடைத்துவிடுவீர். இத்தனை நாட்களாக கணவன் - மனைவி இடையே இருந்த மனக்கசப்புகள் மறையும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். நல்ல நண்பர்களை இந்தக் காலத்தில் சம்பாதிப்பீர்கள். 

மகரம்:

மகர ராசியினருக்கு பத்ர மற்றும் மாளவ்ய ராஜயோகத்தால் நீங்கள் எந்தத் துறையில் பணிசெய்தாலும் இந்த காலத்தில் வெற்றியைச் சம்பாதிப்பீர்கள். வெகுநாட்களாக முடிக்காமல் இழுத்துக்கொண்டே இருந்த ஆர்டர்களை எல்லாம் தொழில்முனைவோர் முடித்து, சம்பந்தப்பட்ட இடத்துக்கு டெலிவரி அனுப்பிவிடுவர். வெகுநாட்களாக கடையில் சரியானவருமானமின்றி தவித்து வந்த மகர ராசியினருக்கு இந்தக் காலத்தில் நல்ல வருவாய் கிடைக்கும். வெகுநாட்களாகப் பணிமாறுதலுக்கு முயற்சித்துக் கொண்டிருந்தவர்களுக்கு புதிய பணியினைப் பெற வாய்ப்பு இருக்கும். சரியான சேமிப்பு இல்லாமல் இருக்கும் நபர்களுக்கு இந்தக் காலத்தில் சேமிப்புக் கிடைக்கும். பணியிடத்தில் உங்களது போட்டியாளர்கள், உங்களுக்கு எதிராகப் பின்னிய சதி வலைகளை எல்லாம் தகர்ப்பீர்கள். வெகு நாட்களாக பாஸ்போர்ட் எடுத்துவைத்து வெளிநாடு செல்ல முயற்சி எடுத்து வந்தீர்கள் என்றால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

கும்பம்:

கும்ப ராசியினருக்கு பத்ர மற்றும் மாளவ்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டக் கதவு திறப்பது உறுதி. வெகுநாட்களாக பணி கிடைக்காமல், சரியான வளர்ச்சி இல்லாமல் இருப்பவர்களுக்கு உரியது கிடைக்கும். தொழில்முனைவோருக்கு எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். கணவன் - மனைவி இடையே இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கி இருவருக்கும் இடையே பிணைப்பு கூடும். பணிசார்ந்த உள்நாடு மற்றும் வெளிநாட்டுப்பயணங்கள் கும்ப ராசியினருக்கு சாத்தியம் ஆகும். வெகுநாட்களாக, பணியிடத்தில் ஆதரவு கிடைக்காமல் தவிப்பவர்களுக்கு, இக்காலத்தில் ஆதரவு கிடைக்கும். 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும். ஆன்மிகம் தொடர்பான பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்து இருங்கள்!

Whats_app_banner

டாபிக்ஸ்