Tamil News  /  Video Gallery  /  Wrestlers' Protest Turns Violent In Delhi; Farmers Break Barricades Set Up By Police To Join Stir

Wrestlers Protest: மல்யுத்த வீரர்கள் போராட்டத்துக்கு ஆதரவு - விவசாயிகள், போலீஸ் இடையே தள்ளு முள்ளு

09 May 2023, 14:44 IST Muthu Vinayagam Kosalairaman
09 May 2023, 14:44 IST
  • டெல்லியில் நடைபெற்ற மல்யுத்த வீரர்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் விதமாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட முயன்றபோகு தள்ளு முள்ளு ஏற்பட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் புகார்களை கூறியிருக்கும் மல்யுத்த வீரர்கள், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி கடந்த இரண்டு வாரங்களாக டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து மல்யுத்த வீரர்களின் போராட்டத்துக்கு விவசாயிகள் ஆதரவை தெரிவிக்க முற்பட்டபோது போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. போராட்டம் நடைபெறும் இடத்தில் கூட்டமாக கூடிய விவசாயிகள், அங்கு தடுப்புக்காக வைக்கப்பட்டிருந்த பேரிகேட்களை கீழே தள்ளினர். இதனால் விவசாயிகளுக்கும், போலீஸுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஆனால் இதற்கு டெல்லி போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதுபோன்ற பொய் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என வலியுறுத்தியுள்ளனர். மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு அளித்து பல்வேறஉ விவசாய அமைப்புகளும் டெல்லி ஜந்தர் மந்தரில் கூடி மிகப் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் ஆதரவு அளிக்க திரண்டனர்.
More