Asian Games 2023: ஆசிய போட்டியில் புனியா, போகத் நேரடி தகுதி அறிவிப்பு - மல்யுத்த வீரர்கள் எதிர்ப்பு
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Asian Games 2023: ஆசிய போட்டியில் புனியா, போகத் நேரடி தகுதி அறிவிப்பு - மல்யுத்த வீரர்கள் எதிர்ப்பு

Asian Games 2023: ஆசிய போட்டியில் புனியா, போகத் நேரடி தகுதி அறிவிப்பு - மல்யுத்த வீரர்கள் எதிர்ப்பு

Jul 20, 2023 02:28 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jul 20, 2023 02:28 PM IST

  • ஆசிய விளையாட்டு போட்டியில் மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோரின் நேரடி தகுதி சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக குழு இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த முடிவு பிற மல்யுத்த வீரர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவு தேசிய தலைமை பயிற்சியாளர்களின் ஒப்புதல் இல்லாமல் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒலிம்பிக் சங்கத்தின் இந்த முடிவுக்கு பல்வேறு வீரர்களும் தங்களது எதிர்பை வெளிப்படுத்தி வருகின்றனர். புனியா 65 கிலோ எடை பிரிவிலும், போகத் 53 கிலோ எடை பிரிவிலும் போட்டியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் புனியா, போகத் ஆகியோரும் ஈடுபட்டனர். அத்துடன் இந்த ஆண்டில் இதுவரை எந்தவொரு சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்காத சூழ்நிலையில் அவர்களது பெயர் வரும் செப்டம்பர் மாதம் சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் இடம்பிடித்துள்்து.

More