Marathon: சென்னையில் முதல் முறையாக SAREE மாரத்தான் போட்டி.. உற்சாகமாக பங்கேற்ற பெண்கள்!
- சென்னை, பெசன்ட் நகரில் தனியார் அமைப்புகள் சார்பில் சேலை மாரத்தான் போட்டி நடைபெற்றது. பெண்கள் சேலை அணிவதை ஊக்குவிப்பதற்காகவும், பெண்களின் மாதவிடாய் சுகாதாரம் மற்றும் மாதவிடாய் நேரங்களில் பெண்கள் பின்பற்ற வேண்டிய குறிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.