Thiruchendur: திருச்செந்தூரில் திமுக கவுன்சிலர்கள் தலைமையில் பணப்பட்டுவாடா? வீடியோ வைரல்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Thiruchendur: திருச்செந்தூரில் திமுக கவுன்சிலர்கள் தலைமையில் பணப்பட்டுவாடா? வீடியோ வைரல்

Thiruchendur: திருச்செந்தூரில் திமுக கவுன்சிலர்கள் தலைமையில் பணப்பட்டுவாடா? வீடியோ வைரல்

Published Apr 18, 2024 02:05 PM IST Pandeeswari Gurusamy
Published Apr 18, 2024 02:05 PM IST

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சி திமுகவை சேர்ந்த 2- வார்டு கவுன்சிலர் செந்தில்குமார் மற்றும் 5- வார்டு கவுன்சிலர் மா.சுதாகர் ஆகிய இருவரும் நாளை வாக்குபதிவு உள்ள நிலையில் திமுக பொறுப்பாளர்களுக்கு திமுகவினர் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கக்கூடிய இரும்பு ஆர்ச் அருகில் வைத்து பணப்பட்டுவாடா செய்தனர். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. பணத்தினை திமுகவினருக்கு பிரித்துக் கொடுத்து வாக்காளர்களுக்கு கொடுக்கச் சொல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியானது. தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில் திமுகவினர் வாக்குக்கு பணம் பட்டுவாடா பண்ணிய வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

More